தமிழகத்திற்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு  மருத்துவப் படிப்பில் தர உத்தரவிட முடியாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 26, 2020

தமிழகத்திற்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு  மருத்துவப் படிப்பில் தர உத்தரவிட முடியாது

 உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி, அக்..26 தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 விழுக்காடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உள்ளிட்ட அரசியல்  கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன.


இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே (2020) அமல்படுத்த உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க முடியுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, அக்.,16க்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


 ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு 50 விழுக்காடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை வைக்காதது மற்றும் நீதிமன்றம் கேட்ட விளக்கங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் வழக்கின் தீர்ப்பை இன்று (26.10.2020)அளித்தபோது தீர்ப்பு வாசித்த துவக்கத்திலேயே இந்த ஆண்டு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று நீதிபதி நாகேஸ்வரவ் தீர்ப்பு கூறினார்.


No comments:

Post a Comment