பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால் 24 விழுக்காடு கரோனா பரவல் குறையும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 27, 2020

பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால் 24 விழுக்காடு கரோனா பரவல் குறையும்!

லண்டன், அக். 27- பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித் தால், கரோனா பரவல் விகி தம் ஒரு மாதத்துக்குள் 24 சதவீதம் குறையும் என்று இங் கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மாதிரி ஆய்வு ஒன்றை நடத்தினர். கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூலை 20ஆம் தேதி வரை 131 நாடுகளில் அமல் படுத்தப்பட்ட கட்டுப்பாடு களையும், அவை ஏற்படுத்திய தாக்கங்களையும் அடிப்படை யாக வைத்து, இந்த மாதிரி ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வு முடிவுகளை ஒரு பத்தி ரிகையில் வெளியிட்டுள்ளனர்.


இதுகுறித்து எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிஷ் நாயர் கூறியதாவது:-


கரோனா பரவலை குறைக்க தனிப்பட்ட நடவ டிக்கைகளாக பள்ளிகள், பணி யிடங்களை மூடுதல், பொது நிகழ்ச்சிகளை தடை செய்தல், 10 நபர்களுக்கு மேல் கூடுவ தற்கு தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இத்தகைய நடவ டிக்கைகளால், 28 நாட்களில் கரோனா பரவல் விகிதம் 24 சதவீதம் குறையும். சில நாடு களில் கரோனா 2ஆவது அலை பரவல் நடப்பதை பார்த்துள் ளோம். அதை தவிர்க்க ஒன் றுக்கும் மேற்பட்ட நடவடிக் கைகளை ஆட்சியாளர்கள் அமல் படுத்தவேண்டும். இதற்கு நல்ல பலன்கள் ஏற்படுவதை பார்த் துள்ளோம்” இவ்வாறு கூறினர்.


No comments:

Post a Comment