பழனி மாவட்ட திராவிட மாணவர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழகத் துணை அமைப்பாளர் அ.தில் ரேஸ் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மண்டல மாணவர் கழகச் செயலாளர் விக்ரம் செல்வா முன்னிலையில் மாணவர்கள் அருண்குமார், எடிசன் செல்வா, தீக்சிதா, தமிழ்செல்வன், சிந்து, மருத்துவக் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன், ஜெய்பூநிஷா, ராஜா, தர்ஷன் ஆகியோர் திராவிட மாணவர் கழகத்தில் இணைந்தனர். மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் ‘உண்மை' இதழினை மாவட்டத்தலைவர் இரணியன் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாணவர்கள் கார்த்திக், மாப்பிள்ளை மீரான், முகைதீன் அப்துல் காதர், இன்பன்ட் ஆகியோர் திராவிட மாணவர் கழகத்தில் செயலாற்ற முன்வந்தனர். மாணவர்களுக்கு மாவட்ட இணைச்செயலாளர் காஞ்சிதுரை ‘உண்மை' இதழினை வழங்கி மகிழ்ந்தார்.
No comments:
Post a Comment