உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து பி.வில்சன் எம்.பி. பேட்டி!
புதுடில்லி, அக். 27- உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி. நேற்று (2610.2020) அளித்த பேட்டி வருமாறு:-
உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் இந்த வருடத்திற்கு வழங்க முடியாது என இன்று தீர்ப் பளித்துள்ளது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் செய்த அப்பீல், குறைந்த பட்சம் இந்த வருடமாவது 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை ஒதுக்கித் தரவேண்டும் என கேட்டதை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தில் திமுக தொடர்ந்த வழக்கில் கடந்த 27.7.2020 தேதியில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இடஓதுக்கீடு கேட்பதற்கு உரிமை உண்டு என்றும் 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு சம்பந்தமாக நால்வர் அடங்கிய குழு; அதாவது மத்திய பொது சுகாதாரத்துறை தலைமை இயக்குநர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத் துவ மற்றும் பல் மருத்துவ கவுன்சில் செயலாளர் அமைத்து தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியில் அவ்வாறான கமிட்டி அமைக்கப்படவில்லை.
மத்திய சுகாதார தலைமை இயக்குநர் அவரே அந்தக் கமிட்டியில் இருந்திருக்க வேண்டும். அதே போல தமிழக சுகாதாரத் துறை செயலாளர் அவர்களே அந்த கமிட்டி இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக தமிழக அரசு ஒரு பிரதிநிதி அனுப்பியிருக்கிறார்கள். அதே போல மத்திய சுகாதார தலைமை இயக்குநர் அதில் இல்லாமல் வேறொரு வரை நியமித்து இருக்கிறார்கள்.
அப்படி அமைக்கப்பட்ட அந்த நால்வர் கமிட்டி இந்த வருடம் இடஒதுக்கீடு குறித்து எதுவுமே விவாதிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இந்த வருடத்திற்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து இந்தக் கமிட்டி 22.9.2020 அன்று கூடும்போது எதுவும் அப்படி பேசப்பட வில்லை. அவர்கள் பேசி யது எல்லாம் அடுத்த வருடத்திற்கு அதாவது 2021-22 முதல் அதற்குண்டான இடஒதுக்கீடு பற்றிதான் பேசி னார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல், இந்த நால்வர் கமிட்டியிலே முக்கியமான நபர்கள் இல்லாமல் போனது தான் இடஒதுக்கீடு விவகாரத்தில் இந்த வருடத்திற்கு முடி வெடுக்க முடியாமல் போனதிற்கு காரணம். உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசும், கடந்த 2016 முதல் பிற் படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஓதுக்கீடு பற்றிய முடிவுகளை எடுக்காமல் வேண்டுமென்றே, பிற்படுத் தப்பட்ட மாணவர்களை வஞ்சிக்கும் விதத்தில் இந்த இட ஒதுக்கீட்டை மறுத்து வருகிறது. இந்த விவகாரம் இன்றோ நேற்றோ அல்ல, 2016இல் இருந்து இந்த இடஒதுக்கீட்டுப் பிரச் சினை உள்ளது.
தி.மு.க. சார்பில் ரிட்மனு கடந்த மே 28ஆம் தேதி முதன் முதலில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யும் போது, அப்போதே மத்திய அரசுக்கு தெரியும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இடஒதுக்கீடு கேட்டு திமுக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று!
அன்றைய தேதி முதல்சென்னை உயர்நீதிமன்றத் தில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் மறுபடியும் தாக்கல் ஆகி, அதாவது 11.6.2020இல் உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றம் சென்று நீங்கள் மனுத்தாக்கல் செய்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத் தலின் பேரில் அன்றைய தினமே தி.மு.கழகம் சார்பில் 11.6.2020அன்றே மீண்டும் மனுதாக்கல் செய்யப் பட்டது. அப்போதும் சரி; மத்திய அரசு இந்த இட ஒதுக்கீடு பற்றி அவர்கள் எள்ளளவும் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் இன்று இந்த வழக்கு இடைகாலத் தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளும் பொழுதும் மத்திய அரசுஇந்த இட ஒதுக்கீட்டை இந்த வருடத்திற்கு வழங்க முடியாது என்று சொல்வது மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் அப்படி ஒரு நல்ல தீர்ப்பைக் கொடுத்தார்கள். அந்த 27.7.2020 தேதியில் வழங்கிய தீர்ப்பில், மூன்று மாதத்திற்குள் இந்த கமிட்டி அமைக்கப்பட்டு முடிவெடுக்க வேண்டும்; அதுவும் அதில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், தமிழ கத்தில் உள்ள இடஒதுக்கீட்டை பெறக்கூடிய வகையில் முடிவெடுக்க வேண்டும்என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.
இந்த மூன்று மாதம் என்பது 27.10.2020இல் முடிவடைகிறது. இந்தக் கமிட்டி சரிவர அமைக்கப்பட்டு அதில் சரியான நபர்கள் இடம் பெற்றிருந்தால்; இன்னும் சொல்லப் போனால்எங்கள் தி.மு.க. தலைவர் அவர்கள் 4.8.2020 அன்று பிரதமர் அவர்களை தொடர்பு கொண்டு, இந்த வருடமே பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றும் தமிழக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுவழங்க வேண்டும் என்று கூறினார்.
அந்தக் கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு தன்னுடைய சுகாதாரத்துறை செயலாளரை அனுப்பியிருக்கலாம். அதுபோல மத்திய சுகாதார தலைமை இயக்குநர் ஏன் இந்தக் கமிட்டியில் இல்லை என்று கேட்டிருக்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு இன்று இந்த நிலைமையில் 27.10.2020க்குள் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் காலம் கடந்து விட்டது. இந்த வருடம் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசும் சொல்லிவிட்டது.
அதே போல் மத்திய அரசின் நிலைப் பாட்டைக் காரணம் காட்டி உச்சநீதி மன்றமும் இடஒதுக்கீடு வழங்க இயலாது என்று நிராகரித்துவிட்டது. எனவே பிற் படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்த வருடம் கிடைக்காது அடுத்த வருடம் தான்கிடைக்கும்.
நாங்கள் உச்சநீதிமன்றத்தில் என்ன சொன்னோம் என்றால்; இந்த நால்வர் கமிட்டி சரிவர அமைத்துவிட வில்லை.உயர்நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்படி இந்தக் கமிட்டி இல்லை. எனவே இந்த கமிட்டி ஒழுங்காக அமைக்கப்பட்டு இருந்தால் 27.10.2020க்குள் நல்ல ஒரு செய்தி கிடைத்திருக்கும். இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகளின் மெத்தனப் போக்கு இட ஒதுக்கீடு இந்த வருடம் கிடைக்காமல் போனதற்கு காரணமாகும்.
கேள்வி:- இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால் எவ்வளவு மாணவர்கள் பயன் பெற்றிருப்பார்கள்?
பி.வில்சன்:- தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 3350 எம்.பி.பி.எஸ். இதில் பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு 251 சீட் இந்த இடஒதுக்கீடு மூலம் கிடைக்க வாய்ப்புள்ளது.ஆனால் இந்த ஆண்டு அந்த 251 சீட் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதேபோல் 502 சீட் கொடுப்பதில் 18 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மாணவர் களுக்குகொடுக்கவேண்டும்.ஆனால் மத்திய அரசு 15 சதவிகிதம்தான் கொடுக்கிறார்கள். அதாவது 90 சீட் தர வேண்டிய இடத்தில் 75 சீட்கள் கொடுக்கிறார்கள். அதனால் 15 தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது இளநிலை மருத்துவப் படிப்புக்கு.
இதே போல 441 சீட் முதுநிலைப் படிப்பில் பிற்படுத் தப்பட்ட மாணவர்களுக்கும் 27 சீட் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் தாழ்த் தப்பட்ட மாணவர்களும் வஞ்சிக்கப்படுகிறார்கள். நாங் களும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கி றோம்.
கடந்த நாடளுமன்றம் கூடிய பொழுது எங்களது நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச் சர் ‘குறிப்பிட்ட முன்னுரிமை ஒதுக்கீடுகொடுக்கலாம்’ என்றார்.அதையும் நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம்.
ஆனால் மத்திய அரசு வழக்குரைஞர் இந்த வருடம் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று சொல்கிறார். எனவே மத்திய மாநில அரசுகள் தமிழக மாணவர் களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment