பிஜேபியை எதிர்த்து தேர்தல் பரப்புரையை மம்தா பானர்ஜி துவங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 26, 2020

பிஜேபியை எதிர்த்து தேர்தல் பரப்புரையை மம்தா பானர்ஜி துவங்கினார்


கொல்கத்தா அக் 26   நாடு முழுவதும் குறிப்பாக  பாஜக ஆளும் மாநிலம் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் ஆட்சி இருக்கும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இது குறித்து அனைத்து விசாரணை ஆணையங்களும் அமைதி காத்து வருகிறது. மேலும் பாலிய ல்வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் மீதே வழக்குகள் பதிவு செய்யப்படும் கொடுமைகள் நடந்துவருகிறது.


 இந்த நிலையில் வரும் ஆண்டு மேற்கு வங்கம், பஞ்சாப், தமிழ் நாடு உள்ளிட்ட பல மாநில சட்டசபைத் தேர்தல் நடை பெற உள்ளது.. இதில் மேற்குவங்கத்தில்  தனக்கு கடும் போட்டியாக உள்ள பாரதீய ஜனதாவை எதிர்த்து புதிய பரப்புரையை துவக்கியுள்ளார் மம்தா பானர்ஜி


savebengalfrombjp.com என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ள ஒரு வலை தளத்திற்குச் சென்று, பதிவு செய்து கொண்டு, தாங்கள் பாரதீய ஜனதாவிட மிருந்து பாதுகாப்பாய் உள்ளதாக குறிப்பிட வேண்டும்.  இந்த இணையதளம் துவங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே 2,89,784 பேர் பதிவு செய்துள்ளனர்.


 


ராஜஸ்தான் சட்டமன்றத்திலும் வேளாண் மசோதாவிற்கு எதிரான தீர்மானம்


ஜெய்ப்பூர் அக் 26 ராஜஸ்தான் சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதா கொண்டு வரப்பட உள்ளதாக காங்கிரசின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறியுள்ளார்.


மத்திய அரசு கடந்த மாதம் 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவர் ஒப் புதலுடன் அம்மசோதாக்கள் சட்ட வடிவம் பெற்றுள்ளன. இந்த மசோ தாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளும்,  விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.  வேளாண் சட்டங்களை முறியடிக்க மாநில சட்டசபைகளில் மசோதாக்கள் நிறைவேற்றுமாறு காங் கிரஸ் முதல்-அமைச்சர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.


அதை ஏற்று, பஞ்சாப் சட்டசபையில் 4 மசோதாக்கள் சமீபத்தில் நிறைவேற்றப் பட்டன. அதனுடன் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று, தனது அரசாங்கமும் பஞ்சாப் போன்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதாவை கொண்டு வரும் என்று ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட் கூறினார்.


இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தேசிய பொது செயலாளர்  கே.சி. வேணுகோபால் தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நம்முடைய விவசாயிகளையும் மற்றும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு உள்ளது. அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.


மத்திய அரசின் 3 வேளாண் சட்டங் களுக்கு எதிராக ராஜஸ்தான் அரசு வருகிற 31ஆம் தேதி மசோதா ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றும் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.


No comments:

Post a Comment