கீழடியில் நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 26, 2020

கீழடியில் நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு


திருப்புவனம்,அக்.26- கீழடியில் 6-ஆவது கட்ட அகழாய்வு நடந்த இடங்களை ஆவணப் படுத்தும் பணியின் போது நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடி யில் தொல்லியல் துறை சார் பில் 6-ஆவது கட்ட அகழ்வா ராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றுள்ளன.


 இதில் 6-ஆவது கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று, கடந்த மாதம் 30-ஆம் தேதியு டன் நிறைவு பெற்றது.


இந்த அகழ்வாராய்ச்சியின் போது, மண்பாண்ட ஓடுகள், எடைக்கற்கள், தங்க நாணயம், சங்கு வளையல்கள் உள் ளிட்ட ஏராளமான பொருட் கள் கண்டுபிடிக்கப்பட்டன. 6-ஆவது கட்ட அகழ்வா ராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றதால், அதன் பின்னர் புதிதாக குழிகள் ஏதும் தோண்டப்படவில்லை.


இதைதொடர்ந்து, தொல்லியல் ஆய்வாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் கண் டெடுக்கப்பட்ட பொருட் களை ஆவணப்படுத்தும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.


கீழடியில் ஏற்கெனவே ஒரு குழியில் செங்கல் கட்டு மானம் கண்டுபிடிக்கப்பட் டது. அதேபோல் அதன் அரு கில் உள்ள மற்றொரு குழி யிலும் செங்கல் கட்டடத்தின் தொடர்ச்சி போல் தெரிந்தது. இந்த செங்கல் கட்டுமானத்தை ஆவணப்படுத்தும் பணிக்காக தொல்லியல் துறையினர் அந்த 2 குழிகளையும் இணைத்து ஒரே குழியாக மாற்றிய போது அங்கு நீளமான செங்கல் சுவர் கட்டுமானம் இருப்பது தெரிய வந்தது. இந்த செங்கல் சுவரின் உயரம், அகலம், நீளம் ஆகியவற்றை ஆவணப்படுத் தும் பணி நடைபெற்று வருகிறது.


No comments:

Post a Comment