டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
- வாஜ்பாய் அமைச்சரவையில் நிலக்கரி துறை இணை அமைச்சராக இருந்த திலீப் ராய், நிலக்கரி ஊழலில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது.
- குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என எம்.அய்.எம். கட்சியின் தலைவர் ஒவைசி அறிவித்துள்ளார்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
- மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினர்க்கு இந்த கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு தர முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஊழல் குற்றச்சாட்டில் சிறை செல்வார் என லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
- மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது குறித்து விவாதிக்க தமிழ் நாடு சட்ட மன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தமிழ் நாடு அரசை வலியுறுத்தியுள்ளன.
- சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு நியமித்த குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த கல்வி ஆண்டில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
- தமிழ் நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என பாஜக கல்விப் பிரிவின் தலைவர் நந்த குமார் எழுதிய கடிதத்தின் எதிரொலியாக, அவரை அப்பதவி யில் இருந்து பாஜக மாநிலத் தலைவர் முருகன் நீக்கியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- மனுஸ்மிரிதி பெண்களுக்கு எதிரானது. அதனை எதிர்க்காமல் இந்தியாவில் பெண்ணியம் பேச முடியாது. பெண்களுக்கு நிபந்தனையற்ற சுதந்திரம் வேண்டும் என போராடுவோர், மனுஸ்மிரிதியை எதிர்த்தே தீர வேண்டும் என அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கத்தின் தலைவரும், சிபிஅய் (எம்.எல்.) அமைப்பின் பொலிட்புரோ உறுப்பினருமான கவிதா கிருஷ்ணன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- பசு வதைத் தடைச் சட்டம் அப்பாவி மக்கள் மீது தவறாகப் பயன்படுத்துவதாக, உ.பி.யில் யோகி அரசு மீது அலகாபாத் உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
- தமிழ் நாடு அரசு நிறைவேற்றிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் தரக்கூடாது. அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
- ஹிந்து ஜாக்ரான் மஞ்ச் எனும் அமைப்பு ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலில் நுழைந்து, சிவன் சிலையை வைத்து பூசை செய்துள்ளனர்.
- ஜம்மு காஷ்மீரில் புல்வாமா பகுதியின் பாஜக தலைவர் இந்திய தேசியக் கொடியால் தனது ஷூவை துடைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. மக்கள் ஜன நாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா, தேசியக் கொடியை அவமதித்ததாக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- குடந்தை கருணா
27.10.2020
No comments:
Post a Comment