கரோனாவில் இருந்து பாலகிருஷ்ணன் குணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 27, 2020

கரோனாவில் இருந்து பாலகிருஷ்ணன் குணம்

சென்னை, அக். 27- மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் டிவிட்டர் பதிவு: கரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 12ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான் 26ஆம் தேதி  குணமடைந்து இல்லம் திரும்பிவிட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள் கிறேன். மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சைய ளித்த டீன் மற்றும் மருத்து வர்கள், செவிலியர்கள் மருத் துவத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment