மும்பை அக் 26 இந்துத்துவா என்றால் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமல் மேடைக்கு மேடை வசனம் பேசு வதும், நாட் டின் வளர்ச்சியில் அக்கறை கொள் ளாமல் எதிர்க் கட்சிகளின் ஆட் சியைக் கவிழ்க்க சட்டமன்ற உறுப் பி னர்களை விலைக்கு வாங்குவதும் அல்ல, என்று 'இந்துத்துவாவை விட்டு வழிதவறிச்செல்கிறார்கள்' என்று கூறிய மோகன் பாகவத்திற்கு மறைமுகமாக உத்தவ்தாக்கரே பதில் கூறியுள்ளார்.
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தசரா விழா கொண்டாட்டத்திற்கு பிறகு மும்பையில் சிவசனோ கட்சி தசரா பேரணி நடத்தும் அப்போது எதிர்கால திட்டங்கள். குறித்து அதன் நிறுவனர் பாலாசாகிப் தாக்கரே பேசுவார், நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் தசராவிழா பேச்சை விட மும்பை சிவசேனா தசராவிழா பேச்சு பரபரப்பை ஏற்படுத்தும். அவர் இறந்த பிறகு அவரது மகன் உத்தவ் தாக்கரே தொடர்ந்து தசரா விழாவில் பேசிவந்தார். தற்போது அவர் முதல்முறையாக மராட்டிய முதல்வராக தசரா விழாவில் பேசியுள்ளார்.
தனது உரையில் அவர் கூறியதாவது, “எங்களுடைய இந்துத்துவாவிற்கும், பாரதீய ஜனதாவின் இந்துத்துவாவிற்கும் வேறுபாடு உள்ளது. வெறும் மணியடிப்பது மட்டுமே(கோயில்களின் திறப்பு என்பது எங்களின் கொள்கை அல்ல.
பால் தாக்கரேயின் இந்துத் துவா வேறு மாதிரியானது. இந்துத்துவா என்றால் என்ன என்பதைப் பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி யுள்ளார். எனவே, அங்கிருந்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தலையில் மூளை என்று ஒன்று இருந்தால் நாங்கள் சொல் வதைப் புரிந்துகொள்வீர்கள்
தற்போது நாட்டின் பொரு ளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. ஆனால், மத்திய மோடி அரசோ, மாநில அரசு களை கவிழ்ப்பதற்குத்தான் முன் னுரிமை தருகிறது. தற்போது நடைமுறையிலிருக்கும் ஜிஎஸ்டி அமைப்பு சரியானது அல்ல என்றால், பழைய முறைக்கு மாறுவதே சிறந்தது என்று கூறிய அவர், மோடி கடந்த ஆட்சியில் டிஜிட்டல் இந்தியா, ஸ்டான்டப் அப் இந்தியா உள்ளிட்ட எத்தனையோ திட் டங்களை அறிவித்தார், அதே போல் கிராம வளர்ச்சி திட்டம் குடிநீர் திட்டம் என்று பல வண்ண வண்ண மாயாஜால வார்த்தைகளை அவிழ்த்து விட்டார். ஆனால் அது எல் லாம் என்ன ஆயிற்று என்று யாராவது மோடியிடம் கேட் கும் துணிச்சல் உள்ளதா? என்று கூறிய அவர் இவர்களுக்கு மாநில ஆட்சியை எவ்வாறு கவிழ்ப்பது, எந்த சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்க லாம் என்று கலந்தாய்விலேயே நாட்களைக் கழிக்கிறார்கள் என்று மோடி அமித்ஷா இருவரையுமே சாடியுள்ளார், மேலும் ஊடங்களைத் தூண்டி விட்டு தனது குடும்ப உறுப் பினர்கள் மீது தொடர் குற்றச் சாட்டுகளை கூறிவருவதை கடுமையாக விமர்சித்த அவர் போதைப்பொருளை உட் கொண்டு தற்கொலை செய்து கொண்ட ஒருவர் மீது ஊட கங்கள் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறது, நாட்டில் வேறு பிரச்சினையே கிடையாதா என்று இந்தி நடிகர் சுசாந்த் சிங் தற்கொலை வழக்கு இன்றுவரை முக்கிய விவாதமாக தொலைக் காட்சியில் ஓடிக்கொண்டு இருப்பது குறித்து பேசினார்.
24 ஆம் தேதி தசரா விழாவில் பேசிய மோகன் பாகவத் நேரடி யாக சிவசேனா பெயரைக் கூறாமல் சிலர் இந்துத்துவ பாதையை விட்டு விலகிச் செல் கின்றனர் என்று கூறியிருந்தார். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக மோடி அமித்ஷாவின் நாட்டு நலனிற்கு எதிரான செயல்பாடுகள் இத்துவத்துவத் திற்கு ஆதரவானதா என்று மறைமுகமாக உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.
No comments:
Post a Comment