உத்தராகாண்ட் பாஜக முதல்வர்மீது ஊழல் வழக்கு
உயர்நீதிமன்றம் உத்தரவு
டேராடூன், அக். 29 உத்தராகாண்ட் பாஜக முதல்வரான திரிவேந்திர சிங் ராவத் ஊடகவியலாளர் ஒருவருக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர் பாக அவர்மீது வழக்கு பதிவு செய்ய உத்தராகாண்ட் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
உத்தராகாண்ட் முதல்வராக பாஜக சார்பில் திரிவேந்திரசிங் ராவத் பதவி வகித்து வருகிறர். இவர் மீது ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.
திரிவேந்திர சிங் ராவத் தான் முதல்வராவதற்கு முன்பு அரசு நடத்தும் பசுப்பாதுகாப்பு ஆணையத்தில் இயக்குநராக இருந்தார். அப்போது பல முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர் பாக அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. அதன் பிறகு இவர் உத்தராகாண்ட் மாநில முதல்வராக பதவி யேற்றார்.
முதல்வரான பிறகு பசுப்பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநராக இருந்த போது நடந்த ஊழல் தொடர்பான செய்திகளைவெளியிடக்கூடாதுஎன்று கூறி ''மித்ரா” என்ற நாளிதழில் பணி புரிந்த உமேஷ் சர்மா என்பவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். அவர் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் முதல்வரின் உறவினர் ஒருவர் உமேஷ் சர்மாவின் வங்கிக் கணக்கில் இருபத்து அய்ந்து லட்சம் செலுத்தியுள்ளார்.மேலும்இதுதொடர் பாக''எந்தபிரச்சினையும்வராமல் பார்த்துக் கொள்கிறோம், நீ முதல் வர் குறித்த செய்தியை வெளியிட வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.
ஊடகவியலாளர் இது குறித்து மாநில ஊழல் ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்தார். ஆனால் அவர்கள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது,
இந்த நிலையில் மாநில அரசின் ஊழல் ஒழிப்புத்துறை மீது நம்பிக்கை இல்லை என்று கூறி சி.பி.அய்.யிடம் முதல்வர் தனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தது தொடர்பாக புகார் அளித்தார்.
சி.பி.அய்.யும் சான்றுகள் எதுவும் இல்லை என்று கூறி இவரது புகாரைப் பெற மறுத்துவிட்டது. இதனை அடுத்து உத்தராகாண்ட் உயநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ”ஊடகவி யலாளர் கொடுத்த புகார் தொடர்பாக ஏன் விசாரணை நடத்தவில்லை” என்று மாநில லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் சிபிஅய்-யிடம் விளக்கம் கேட்டிருந்தனர்
இதற்கு பதிலளித்த சி.பி.அய் முதல் வர் மீதான ஊடகவியலாளர் அளித்த புகார் தொடர்பாக சில விளக்கம் கேட்டிருந்தோம் அவர் இது குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கவில்லை என பதில் கூறியிருந்தது,
இதனை ஏற்காத நீதிமன்றம் “புகார் அளித்தவரின் புகார் மனுவை ஏற்றுக்கொள்ளாமலேயே அவரிடம் விளக்கம் கேட்பது சரியல்ல. முதலில் அவரது புகார் மனுமீது நடவடிக்கை எடுங்கள், குற்றம் சாட்டப்பட்ட உத்தராகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள்” என்று கூறியுள்ளது
உமேஷ் சர்மாவின் முதல்வர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் உத்தரா காண்ட் உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண் டுள்ளது. அதையொட்டி முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்ய சி.பி.அய் முடிவு செய்துள்ளது, இதே போன்று 2015-ஆம் ஆண்டு பாஜக மத்திய அமைச்சர் மீது தொடரப்பட்ட வழக்கில் 3 ஆண்டு சிறைதண்டனை வழங்கிய நிலையில், தற்போது பதவியில் உள்ள முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதனை அடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 ஆம் தேதி பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மோடி எனது ஆட்சிகாலத்தில் பாஜக அமைச் சர்கள் முதலமைச்சர்கள் யாருமே ஊழல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாத வர்கள் என்று பேசிய நிலையில் தற்போது முதலமைச்சர் ஒருவரே ஊழல் வழக்கில் சிக்கியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment