வேதாரண்யம்
திருத்துறைப்பூண்டி கழக மாவட்டம் திராவிடர்கழக வேதாரண்யம் ஒன்றியச் செயலாளர் சி.பஞ்சாபகேசன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 3 அரையாண்டு 'விடுதலை' சந்தாக்களை வழங்கினார். அப்போது, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், மாவட்டச் செயலாளர் சு.கிருட் டிணமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் உடனிருந் தனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி கழக மாவட்டம் பெரியார் பெருந்தொண்டர் பஞ்சநதிக்குளம் புலவர் சீ.கனகசுந்தரம் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 'விடுதலை' ஒரு சந்தா வழங்கினார். அப்போது, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகய்யன், மாவட்டச் செயலாளர் சு.கிருட்டினமூர்த்தி, மாநில இளை ஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் உடனிருந்தனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனர் சீரிய பகுத்தறிவாளர் இரா.போசு அவர்கள் விடுதலை ஒரு சந்தா ரூ 1800/- அய் மண்டல தலைவர் சாமி திராவிடமணியிடம் வழங்கினார்.
கழகத்தில் புதிதாக இணைந்த தோழர் பல்த்தசார் (எ) தாஸ் விடுதலை ஒரு சந்தா ரூ.1800/- அய் மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமியிடம் வழங் கினார். உடன் மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை.
தேவகோட்டை கழகத் தோழர் எஸ்.மணியன் 'விடுதலை' ஒரு சந்தா ரூ.1800-அய் மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை வசம் வழங்கினார்.
ஈரோடு - மாவட்ட முன்னோடியும், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினருமான கோ.பாலகிருட்டிணன் அவர்களது 71 ஆம் ஆண்டு 7.11.2020 பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டக் கழகம் சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு - த.சண்முகம், மாவட்ட கழகத் தலைவர் கு.சிற்றரசு, மாநில இளைஞரணி துணை செயலாளர் தே. காமராஜ் ஆகியோர் அவர் கடைக்குச் சென்று சிறப்புச் செய் யப்பட்டது. பிறந்த நாள் மகிழ்வாக பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணனிடம் 'விடுதலை' 3 சந்தா தொகையாக ரூ.5,400யை அமைப்புச் செயலாளரிடம் வழங்கினார்.
திராவிடர் கழக திருவாரூர் மண்டல செயலாளர் இராயநல்லூர் ச.பொன்முடி கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 'விடுதலை' 2 சந்தா வழங்கினார். அப்போது, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், மாநில இளை ஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment