80 ஆசிரியருக்கு கரோனா பாதிப்பு உத்தரகாண்டில் 84 பள்ளிகள் மூடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

80 ஆசிரியருக்கு கரோனா பாதிப்பு உத்தரகாண்டில் 84 பள்ளிகள் மூடல்


புதுடில்லி,நவ.7,  உத்தராகண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை யடுத்து, 84 பள்ளிகள் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.


உத்தரகாண்டில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப் பட்டிருந்த பள்ளிகள் கடந்த 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில், பாரி மாவட்டம் கல் ஜிகால், கிர்சு, பாரி, கோட், பபோ ஆகிய வட்டங்களுக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 80 ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து, 84 பள்ளிகள் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.


இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை செயலாளர் அமித் நெகி கூறும்போது, “மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து 13 மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது. கரோனா பரவுவதைத் தடுப்பதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக் குமாறு கல்வித் துறைக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.


குளிர்காலம் என்பதால் கரோனா பாதிப்பு அதி கரிக்க வாய்ப்புள்ளதால் பொது மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண்டிகைக் காலத்தில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறை யாகக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார்.


No comments:

Post a Comment