சுயமரியாதைச் சுடரொளி மானமிகு  ஆர். தருமராசன் 32ஆம் ஆண்டு நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

சுயமரியாதைச் சுடரொளி மானமிகு  ஆர். தருமராசன் 32ஆம் ஆண்டு நினைவு நாள்


தந்தை பெரியார் கொள்கையின் பால் இளமை முதல் ஈர்க்கப்பட்டவரும் எஸ்.ஆர்.எம்.யூ. என்ற திராவிடர் கழகத்தின் இரயில்வே தொழிற்சங்கத்தின் வளர்ச்சிக்கும், செயல்பாடுகளுக்கு முக்கிய கிரியா ஊக்கியாக இருந்தவரும், இரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவரும், தந்தை பெரியார் கொள்கை வழி 'சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு' எனும் நெறியில் தம் வாழ்க்கைப் பாதையை அமைத்து பிள்ளைகளை எல்லாம் கல்வி ஏணியில் மேலே உயர்த்திய பெருமகனாருமான மானமிகு


ஆர். தருமராசன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இந்நாள் (8.11.1988) அவர்தம்  நினைவைப் போற்றும் வகையில் அவருடைய செல்வர்கள் டாக்டர் த. தமிழ்மணி, த. ராஜேந்திரன், த. வீரசேகரன், த.சித்தார்த்தன், டாக்டர் த. அருமைக்கண்ணு ஆகி யோர் நன்றி உணர்வுடன் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத்துக்கு ரூ.32 ஆயிரம் நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!


No comments:

Post a Comment