இந்து மதத்தைச் சேர்ந்த தீண்டாதவர்களுக்கு மாத்திரம் நடக்க உரிமையில்லை என்று மாஜிஸ்தி ரேட்டால் குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்க வேண்டுகி றோம். இவ்வாறு தீர்ப்புக் கூறுவதற்கு, இந்துக்களின் பிடிவாதமும், குருட்டு மாமூல் பழக்கமும் காரண மல்லவா? இப்பழக்க வழக்கங்களை ஆதாரமாகக் கொண்டு தானே மாஜிஸ்திரேட் உத்தரவளித்திருக் கிறார்? இதற்கு விட்டுக் கொடுக்காத இந்துக்களும், இப்பழக்க வழக்கங்களும், ஆதர வளிக்கும் சட்டமும், நியாயமும் இருக்கும் வரையிலும் தீண்டாதார்களுக் குச் சத்தியாக்கிரகத்தினால் என்ன நியாயம் கிடைக்க முடியும்?
- தந்தை பெரியார், “குடிஅரசு”, 12.6.1932
‘மணியோசை’
No comments:
Post a Comment