டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
- உ.பி.யில் நடைபெற்ற ஏழு சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளிவர உள்ள நிலையில், ஆளும் கட்சியான பாஜக தேர்தலில் தில்லுமுல்லுகளை செய்துள்ளது. இது குறித்து விரிவான ஆதாரங்களை தேர்தல் முடிவுக்குப் பின் தெரிவிப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
- தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை இயக்குநர் அர்னாப் கோஸ்வாமிக்கு, இடைக்கால ஜாமீன் கோரும் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
- அய்க்கிய அரபு நாட்டில், 14 வயதுக்கு மேல் இருபாலரும் சேர்ந்து வாழவும், ஆணவக் கொலையில் ஈடுபடுவோர்க்கு மரண தண்டனையும் விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. காலத்திற்கேற்ற வகையில் தனி நபர் மற்றும் சிவில் சட்டங்கள் மாற்றம் பெறுகின்றன. அய்க்கிய அரபு நாடுகள் கொண்டு வந்துள்ள சட்டங்கள் அனைத்து மதசார்பற்ற, பன்முக, பல கலாச்சார நாடுகளுக்கும் பொருந்தும், இந்தியா உட்பட என தலையங்கச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
- உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில், அரசு மருத்துவமனை களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக் கீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், வேலை வாய்ப்பு, விலைவாசி ஏற்றம் ஆகியவை குறித்து மக்கள் கொண்டுள்ள கவலையைப் பிரதிபலிக்கும் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- தெலுங்கானாவில் கரோனா ஊரடங்கு காரணமாக, கல்விக் கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவியைப் போன்று இந்தியாவில் பல குடும்பங்களின் வாழ்வை மோடி அரசு சீரழித்துவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தி டெலிகிராப்:
- தற்கொலைக்கு தூண்டியதான புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அர்னாப் கோஸ்வாமிக்கு உரிய பாதுகாப்பையும், அவரது உறவினர்கள் சந்திக்க ஏற்பாடு செய்திடவும், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரி, அம்மாநில உள்துறை அமைச்சரிடம் கூறியுள்ளார்.
டெக்கான் ஹெரால்டு:
- மக்களுக்கு இரு வேளை உணவு தர இயலாத பாஜக அரசு, எப்படி இரண்டு கோடி பேருக்கு வேலை தரும்? அமெரிக்காவில் டிரம்புக்கு ஏற்பட்ட தோல்வி, பீகாரில் ஏற்படும் என மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா தெரிவித்துள்ளார்.
குடந்தை கருணா
10.11.2020
No comments:
Post a Comment