புதுவை, நவ. 10- புதுவை மாநில திராவிடர் கழகம் சார்பில் 33 காணொலி காட்சிகள் பல்வேறு தலைப்புகளில் பல சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரமும் புதன் அன்று மாலை 6 மணி முதல் பல்வேறு தலைப்புகளில் சிறப்பாக நடத்தப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளுக் கும் புதுச்சேரி மாநில கழக தலைவர் சிவ வீரமணி தலைமை ஏற்றார். தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந் திரசேகரன் தொடக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சிகளின் விபரம்:
புதுவை மாநில காணொலி கூட்டங்கள்
8.7.2020 - கடலூர் கவிஞர் க. எழிலேந்தி - “பெரியாரும் கிராம சீர்திருத்தமும்” - புலவர் சு. இராவணன் - வள்ளுவரின் வாய்மைப்போர்
22.7.2020 - “காவியத் தலைவர் பெரியார்” - முனைவர் க. தமிழமல்லன், முனைவர். அதிரடி அன்பழகன், முனைவர். பூவை புலிகேசி, கவிஞர் க. எழிலேந்தி, இர. இராசு.
29.7.2020 - “தலைவர்கள் பார்வையில் பெரியார்”- யாழ் திலீபன் (அண்ணல் அம்பேத்கர்), தென். சிவகுமார் (அறிஞர் அண்ணா), பூ. சி. இளங்கோவன் (பச்சைத் தமிழர் காமராஜர்), நா. தாமோதரன் (முத்தமிழ் அறிஞர் கலைஞர்), அண்ணா. சரவணன் (அஞ்சாநெஞ்சன் அழகிரி).
5.8.2020 - “தமிழ்ச் சமுதாயத்தை தலை நிமிரச் செய்த திராவிடர் இயக்கத்தை எதிர்ப்பவர்கள் - இன வரலாறு அறியாத வர்களா? எதிரிகளின் கைக்கூலிகளா?” நடுவர்: பேரா. இராச குழந்தைவேலனார். இன வரலாறு அறியாதவர்களே! = கவிஞர் க எழிலேந்தி, பேரா. ஜானகி இராசா. எதிரிகளின் கைக்கூலிகளே!: பேரா. பொ. சாந்தி, தோழியர். கோமதி.
12.8.2020 - “திராவிடர் இயக்கத்தால் கிடைத்த உரிமைகள் பறிக்கப்படும் இன் றைய நிலையில் அமைதி காக்கும் தமிழர் கள் குற்றவாளிகள்” நடுவர்: பேரா. இராச குழந்தைவேலனார். வழக்கு தொடுப்பவர்: கவிஞர். இளமாறன். வழக்கு மறுப்பவர்: புதுமைத் தேனீ. மா. அன்பழகன், சிங்கப் பூர்.
17.8.2020 - “நூற்றாண்டு நாயகர், சுயமரி யாதை சுடரொளி, காரை சி. மு. சிவம் அவர்களின் 33ஆவது நினைவு போற்றும் நிகழ்வு” நினைவுரை கவிஞர். கலி பூங்குன் றன்.
21.8.2020 - “பெரியாரின் இன்றைய தேவை”, சிறப்புரை: பேரா. ஈரோடு ப. காளிமுத்து.
9.9.2020 - “ஒப்பற்ற புரட்சியாளர் தந்தை பெரியார்”, நடுவர்: முனைவர். துரை சந்திரசேகரன், புத்துலக சிற்பி (அதி ரடி அன்பழகன்), பகுத்தறிவின் சிகரம் (வேட்டவலம் பட்டாபிராமன்), மானுடப் பற்றாளர் (பூவை புலிகேசி).
16.9.2020 “தந்தை பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்” கவியரங்கத் தலைவர்: கவிஞர் க. எழிலேந்தி, ‘பெண்ணுரிமை காக்க’ - பாவலர் சண்முகசுந்தரம், ‘மொழி உரிமைக் காக்க’- கவிஞர் விநோத்குமார், ‘சமூக நீதி காக்க’- கவிஞர் சுப. வீரப்பன், ‘கல்வியுரிமை காக்க’- கவிஞர் சுபா அருணாச்சலம், ‘மூட நம்பிக்கை ஒழிக்க’- ஓவியப்பாவலர் க. இரமேஷ்.
23.9.2020 “மருந்தில்லா மருத்துவமும் மாற்று மருத்துவமும்” - மருத்துவர் ச. திலீ பன் (எ) பழநிச்சாமி.
7.10.2020 “நாட்டின் ஒற்றுமைக்கு மிகப் பெரும் சவால்”, சுழலும் சொற்போர் நடுவர்: முனைவர். துரை சந்திரசேகரன், ‘மத வெறி தாண்டவமே’ - முனைவர். அதிரடி க.அன்பழகன், ‘மாநில உரிமைப் பறிப்பே’- ச. பிரின்சு என்னாரெசு பெரியார், ‘பாலியல் வன் கொடுமையே’- வழக்குரைஞர் ப. மணியம்மை.
14.10.2020 “என்றும் மாறாதவர்கள்”, இள. புகழேந்தி, “பாஜக அரசின் அத்து மீறல்கள்”, வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி.
21.10.2020 “பெரியார் தமிழுக்கு என்ன செய்தார்”, சிறப்புரை: பேரா. ஈரோடு ப. காளிமுத்து.
28.10.2020 “பெரியாரியலே வெல்லும்-நாளைய சரித்திரம் சொல்லும்”, மாங்காடு மணியரசன், “அறிவியல் பார்வையில் சித்த மருத்துவம்”, மருத்துவர் பொ. அருண் மொழி, எம்.டி.,
15.7.2020 “பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கருத்தரங்கம்”, திரு ஏ.வி.சுப்ர மணியன், தலைவர், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி.
26.8.2020 “பெரியார் உலகு மயம்”- முனைவர் மு.சு.கண்மணி, உதவிப்பேராசிரி யர், தேவகோட்டை. சே.மெ. மதிவதனி, மாநில அமைப்பாளர், திராவிட மகளிர் பாசறை.
2.9.2020 “தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனை” முனைவர் உ.பிரபாகரன், மேனாள் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
30.0.2020 “அறியாமைப் பிணி அகற்றும் அய்யாவின் அறிவு”, மருத்துவர் கோ.சா. குமார், எம்.பி.,பி.எஸ், செயலாளர், பெரியார் மருத்துவர் அணி.
No comments:
Post a Comment