(முதலீடுசெய்யும் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவு அளிப்பதாகவும் தொழிலாளர்களுக்கும் சிறு தொழில் முனைவோருக்கும் ஆதரவு தராமல் இருப்பதாகவும் உள்ள பொருளாதார விளையாட்டின் அடிப்படைகள் மாற்றம் பெறவேண்டும்.)
அருண் மெய்ரா
இந்தியாவுக்கு ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பொருளாதார பிரமிடின் கீழ்பாதியில் இருக்கும் மக்களின் வருவாய் மிகமிகக் குறைவாக இருக்கிறது. பொரு ளாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கும் இதற்கான தீர்வுகள் வருமாறு: சந்தைகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிப் பது, உற்பத்தியைப் பெருக்குவது மற்றும் தொழில் நுட்பத் தைப் பயன்படுத்துவது. மனித உழைப்புடன் பொருத்திப் பார்க்கும் போது இத்தகைய பொருளாதார அடிப்படைகள் மீண்டும் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்று தெரிய வருகிறது.
மூன்று தீர்வுகள்
தங்களது விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு உயர்ந்த விலை கிடைக்கும் அளவுக்கு விவசாய உற்பத்திப் பொருள் களுக்கான சந்தைகள் சுதந்திரமாக திறந்து விடப்பட வேண்டும் என்றும், முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் தொழிலாளர் கொள்கைகள் கட்டுப்பாடுகள் அற்று சுதந்திர மாக இருக்கச் செய்யப்பட வேண்டும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். போதுமான வருவாய் இன்றி வியாபாரம் செய்வதற்கான நல்லதொரு சந்தையாக மக்கள் இருக்க முடியாது. உண்மையைக் கூறுவதானால், போது மான அளவுக்கு வருவாய் வளர்ச்சி பெறாததே முதலீடுகள் குறைந்து போனதற்கான காரணம் என்றுதான் கூறவேண் டும். தொழிலாளர்களின் ஊதியமும் சந்தைகளின் அளவும் அதிகப் படுத்தப் படும்போது, முதலீட்டாளர் மீது சுமத்தப் படும் தொழிலாளர் ஊதிய செலவு சுமையைக் குறைப்பதே சந்தைகளைத் தொழிலாளர்களுக்கு சுதந்திரமாக திறந்து விடுவதன் நோக்கமாகும். பொருளாதார பரிசீலனைகளுக்கு அளிக்கப்படுவதை விட அதிக முக்கியத்துவம் மனித உரி மைகளுக்கு வழங்கப்பட வேண்டும். உற்பத்திப் பொருள் களை விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையேயான பரிமாற்றங்கள் மிகமிக மென்மையாக நடந்தேறுவதற்கு நல்ல சந்தைகள் வழி வகுக்கின்றன. என்றாலும் மனிதர்கள் என்பவர்கள் அவ்வாறு விற்று வாங்கக் கூடிய விவசாய உற்பத்திப் பொருள்கள் அல்லது கனிமங்கள் போன்று இருக்கும் பொருள்கள் அல்ல. அடிமை சந்தையில் இருந்த பழக்கத்தைப் போல, மிக உயர்ந்த அளவு ஏலம் கேட்ப வருக்கு மனிதர்களை ஏலத்தில் விற்கக் கூடாது. சந்தைகளில் மனிதர்களும் கூட விற்று வாங்க இயன்ற பொருள்களே என்று கருதும் அருவருக்கத் தக்க எண்ணத்தை ஒழிப்பதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் நீண்ட காலமாக கடுமையாகப் போராடி வந்துள்ளனர். பொருளாதார முன்னேற்றத்திற்கான ரகசியம் உற்பத்தி மேம்பாட்டில் அடங்கியிருக்கிறது. முத லீடு செய்யப்படும் உள்ளீட்டுப் பொருள்களுக்கும், அதன் வாயிலாகக் கிடைக்கும் உற்பத்திப் பொருள்களுக்கும் இடையே உள்ள ஒரு விகிதாசார அளவே உற்பத்தி எனப்படுவது. ஓர் அளவிலான உள்ளீட்டுப் பொருள்களைக் கொண்டு அதிக அளவிலான பொருள் உற்பத்தி செய்யப் பட்டால், அந்த தயாரிப்பு நடைமுறை உயர்ந்தது என்று கருதப்படும். ஒரு பொருளாதார உற்பத்தித் திறனை மதிப்பீடு செய்வதற்கு தொழிலாளர் உற்பத்தித் திறனையே அளவு கோலாக பொருளாதார வல்லுநர்கள் பொதுவாகப் பயன் படுத்திக் கொள்வார்கள். நாடு/பொருளாதாரம் என்ற நடைமுறையில் உள்ள மக்களின் எண்ணிக்கைதான் உள் ளீட்டுப் பொருள்களாக இருப்பதாகும். அவர்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உள்நாட்டு ஒட்டு மொத்த உற்பத்திப் பொருள்களுக்கு செலவிடப்பட்டதை விட அதிக அளவு விலைக்கு அவற்றை விற்பதால் கிடைப்பது லாமாக இருப்பதாகும். தங்களின் ஒட்டு மொத்த பொருள் உற்பத்தி யின் அளவை அதற்காக நியமிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டு வகுத்துப் பார்க்கும் நடை முறையையே தங்களது உற்பத்தித் திறனை அளவிடுவதற்கு நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. தங்களது உற்பத்தித் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு இரண்டு உத்திகளை உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்றலாம். ஒன்று, தொழிலாளர் களின் அளவை ஒரே சீராக வைத்துக் கொண்டு ஒரு தொழிற்சாலையின் ஒட்டு மொத்தத் தயாரிப்பையும் அதி கரிக்கச் செய்யும் கடினமான நிர்வாக வழியை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த வழிக்கு, ஒட்டு மொத்த உற்பத்தியையும் அதிகப்படுத்துவதற்கான தொழிலாளர் களின் தொழில் திறன் மேம்பாட்டுக்கு உதவி செய்வதற்கான கூடுதலான இயந்திரங்களும், தொழில் நுட்பமும் தேவைப் படும். அதிக அளவில் முதலீடு செய்யும் தொழில்களுக்கும் நாடுகளுக்கும் இது ஒரு நல்ல உத்தியாக இருப்பதாகும்.
இதற்கு மாற்று வழியாக, தொழிலதிபர்கள் தங்களது தொழிலாளர்களின் ஆற்றல்களை உயர்த்தி, தொழிற்சாலை யில் தொடர்ந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கலாச் சாரத்தை உருவாக்கி பின்பற்ற வேண்டும். அதன் மூலம் தொழிலாளர்களும் நிர்வாகிகளும் தங்களது நடைமுறையின் ஆற்றலை மேம்படுத்துவதில் ஒருவருக்கொருவர் ஒத்து ழைத்து, வரையறுக்கப்பட்ட முதலீட்டு ஆதாரங்களில் இருந்து கூடுதலான அளவில் உற்பத்திப் பொருள்களை பிழிந் தெடுக்க முடியும். இதுதான் "ஒட்டு மொத்த தர நிர்வாகம்" என்றழைக்கப்படும் உத்தியாகும். இந்த உத்தியைப் பயன் படுத்தி ஜப்பான் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி செலவைக் குறைத்ததுடன், தங்களது தயாரிப்புகளின் தரத்தையும், 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் உயர்த்தியுள்ளன. இதன் மூலம் உலகிலேயே மிகமிக அதிக அளவில் பிற நிறுவனங் களுடன் போட்டியிட இயன்ற நிறுவனங்களாக அவை ஆயின. ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது தொழிலாளர் களுடன் வாழ்நாள் நியமன ஒப்பந்தங்களை செய்து கொண் டுள்ளன. தங்கள் தொழிலாளர்களை நம்பி அவர்களின் பெயர்களில் தொழிலதிபர்கள் முதலீடுகளை செய்தனர். நிறுவனங்களின் இந்த பாராட்டத் தகுந்த சொத்துக்கள் தங்களது ஆற்றல்களை வளர்த்துக் கொண்டு, அவர்களது நிறுவனங்களின் ஒட்டு மொத்த உற்பத்தியையும் மேம் படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளனர். ஒரு தொழில் நிறுவனம் கொண்டிருக்கும் சொத்துகளில் மனிதர்கள் மட்டுமே "பாராட்டத் தகுந்த சொத்துக்களாக இருப்பவை" ஆகும். தங்களது சொந்த ஆற்றல்களை அவர்களால் மேம்படுத்திக் கொள்ள இயலும். இயந்திரங்கள் மற்றும் கட்டடங்களின் மதிப்பு காலப் போக்கில் குறைந்து கொண்டே செல்லும் என்பதை எந்த கணக்காளரும் அறிவர். அதே நேரத்தில் மனிதர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டு கற்பதற் கான சூழ்நிலைகளை உருவாக்கித் தரும்போது அவர்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்கின்றனர். உற்பத்தியைப் பெருக்குவதற்காக சோம்பேறித் தனமான நிர்வாகம் கடைப்பிடிக்கும் உத்தி, உற்பத்திப் பணியை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்ப தாகும். சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது தொழிலா ளர்களை வேலையில் வைத்துக் கொள்வதும், அவை மற்ற உற்பத்தி நிறுவனங்களுடன் போட்டியிட இயலாத அளவுக்கு உற்பத்தி சூழ்நிலைகள் பாதகமாக மாறும்போது தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது என்பதும்தான் அந்த உத்தி. நிறுவனங்கள் செய்வதைப் போல, ஒரு நாட்டின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அந்தந்த நாட்டு அரசுகள் இந்த உத்தியைப் பயன்படுத்த இயலாது. உற்பத்திப் பணியில் இனியும் பயன்படுத்திக் கொள்ள முடியாத தொழிலாளர்களை பணியில் இருந்து ஒரு நிறுவனத்தால் நீக்குவதற்கு இயலும். நிறுவனத்தின் கணக்குகளில் இருந்து கழித்துவிடப்பட்ட வர்கள் அவர்கள். அத்தகைய தொழிலாளர்களின் இழப்பை வேறு எந்தத் தொழிலாளியாவது நிறைவு செய்வார் என்று நிறுவனத்தின் முதலாளிகள் நம்புகின்றனர். இவ்வாறு பயன் படுத்தப்பட்டு நீக்கப்பட்ட தொழிலாளர்களின் நலன்களுக்கு இனியும் அவர்கள் பொறுப்பல்ல.
என்றாலும், ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகை அளவுக்கு ஜி.டி.பி. அளவிலான உற்பத்தியை ஒரு நாடு செய்யாவிட்டால், தனது நாட்டு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் அதிகாரம் அதன் அரசுக்கு இருப்பதில்லை. அவர்கள் வேறு எங்கே போவார்கள்? அவர்களது நலன்களில் யார் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்? வேறு வாழ்வாதாரம் அற்ற நிலையில் மற்ற நாடுகளுக்கு புலம் பெயர்வதற்கு அவர்கள் முயலக் கூடும். ஆனால் அவர்களை ஏற்றுக் கொள்ள அந்த நாடுகள் தயாராக இல்லை; தங்களது சொந்த குடி மக்களுக்கே போதுமான அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியாத அந்த நாடுகள் புலம் பெயர்ந்தவர்களுக்கு எவ்வாறு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியும் என்பதே இதன் காரணம்.
பல முன்னேறி வரும் நாடுகளில் உள்ளது போல முதலீடு அரிதாகவும், மனித வளம் ஏராளமாகவும் இருக்கும் நாடு களில், சராசரியான உற்பத்தி சதவிகிதம் என்பது ஓரளவு உள்ளீட்டு முதலீட்டுக்குக் கிடைக்கும் உற்பத்தி இவ்வளவு தான் என்பதுவே. இதுதான் வியாபாரத்தையும், தேசிய உத்திகளையும் இயக்கிச் செல்வதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானைத் தொழில் ஆற்றல் மிகுந்ததொரு நாடாக ஆக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது “ஜப்பான் இன்கார்ப்ப ரேஷன் (Japan Inc)” என்ற இந்த உத்திதான். இதுதான் ஈ.எஃப். சுமாச்சரின் (E.F.Schumacher) கனவும் கூட. “சிறியதே அழகு மிகுந்தது” என்ற பெயர் கொண்ட தனது நூலில் அந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கும் சுமாச்சர் அவரது காலத்துக்கும் முந்தைய ஒரு பொருளாதார வல்லுநர் ஆவார். தொழில் நுட்ப ஆற்றலுடன் இணைந்த முதலீடு எதனை நோக்கி செல்லும் என்பதை அவர் அறிந்து கொண்டார். 1966 ஆம் ஆண்டில் ரிசர்ஜன்ஸ் என்ற பத்திரி கையில் வெளியிடப்பட்ட “இடைநிலை தொழில் நுட்பத்தின் மூலம் தொழில்மயமாக்கப்படல்” என்ற தலைப்பிலான தனது கட்டுரையில் அவர் எழுதியிருக்கிறார்: “ஒவ்வொரு பணி இடத்துக்கும் தேவைப்படும் தளவாடங்களுக்கான செலவின் தொழில் நுட்பத்தின் நிலையை நாம் விளக்கும் போது, சிறப்பாக முன்னேற்றம் அடைந்து வரும் ஒரு நாட்டின் உள் நாட்டு தொழில் நுட்பத்தை ஒரு ஒரு பவுண்ட் தொழில் நுட்பம் என்று நம்மால் அழைக்க இயலுமானால், மேற்கத்திய நாடுகளின் நவீன தொழில் நுட்பத்தை ஒரு ஆயிரம் பவுண்ட் தொழில் நுட்பம் என்று நம்மால் அழைக்க இயலும். அயல்நாடுகளின் உதவியுடன் முன்னேறி வந்து கொண்டிருக்கும் நாடுகள் , அவர்களது பொருளாதாரத்தில் ஒரு ஆயிரம் பவுண்ட் தொழில்நுட்பத்தை ஊடுறுவச் செய்ய மேற்கொள்ளும் முயற்சிகள் ஒரு ஒரு பவுண்ட் தொழில் நுட்பத்தை பேரச்சத்தை ஏற்படுத்தும் வேகத்தில் தவிர்க்க இயலாதபடி கொன்று விடுகிறது. பெருமளவிலான தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காரணத்தால் அவர் கள் பெரிய அளவில் புலம் பெயர்ந்து செல்ல வேண்டியிருக் கும் அதன் கேடுகளுடன் ஒரு இரட்டைப் பொருளாதாரத்தை உற்பத்தி செய்யும் நவீன பணியிடங்கள் உருவாக்கப்பட இயன்ற வேகத்தை விட அதிக வேகத்தில் பாரம்பரியமான பணியிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன." மேற்கத்திய மயமாக்குதல் மற்றும் தொழில்நுட்ப மயமாக்குதல் ஆகிய வற்றின் பின்னணியில் இருக்கும் உந்துதலின் அடித்தளத்தில் இத்தகைய நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று சுமாச்சர் எச்சரிக்கிறார். கோவிட்-19 தொற்றுநோய் பரவுவ தைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஊரடங்கு சட்டத்தினால் அனைவரும் காணும்படியான கேடுகளை அது உருவாக்கிவிட்டது.
சமுதாய ஒப்பந்தம்
ஒரு நல்ல வேலை என்று சொல்ல இயன்றது தொழிலாளர்களுக்கும் சமூகத்துக்கும் இடையேயான ஓர் ஒப்பந்தம் என்ற அர்த்தத்தையே தரும். சமூகத்துக்குத் தேவைப்படும் பொருள்களை உற்பத்தி செய்து தருவதுடன், தேவைப்பட்ட சேவைகளை செய்வதும் இந்தத் தொழிலாளர் கள்தான். இதற்கு பிரதிபலனாக தொழிலாளர்கள் கவுரவத் துடனும், மரியாதையுடனும் நடத்தப்படும் ஒரு நிலை அமைந்த, போதுமான வருவாய் ஈட்டுவதற்கு இயன்ற சூழ் நிலைகளை அந்த தொழிலாளர்களுக்கு சமூகமும், பொரு ளாதாரமும் ஏற்படுத்தித் தரவேண்டும். நல்ல வேலைகளுக்கு தொழிலாளர்களுக்கும் அவர்களது முதலாளிகளுக்கும் இடையே நல்ல ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படுவது தேவையானவை ஆகும். அதனால், தனது முதலீட்டாளர் களுக்கு மட்டுமன்றி, தனது அனைத்து குடி மக்களுக்கும் நல்லதொரு சமூகத்தை உருவாக்கித் தரவேண்டிய தனது கடமையை நிறைவேற்றுவதற்கு, தங்களது வேலையை செய்வதற்கு தொழிலாளர்களை நியமித்துக் கொள்ளும் முதலாளிகளுக்கும், நியமிக்கப்படும் தொழிலாளர்களுக்கும் இடையேயான ஒப்பந்தங்களை, எத்தகைய பொருளா தாரத்திலும், அரசு முறைப்படுத்த வேண்டும்.
தொழிற் கொள்கை மற்றும் சர்வதேச வர்த்தகம் பற்றிய வல்லுநரான பொருளியலாளர் டேனி ரோட்ரிக் குறைந்த ஆற்றல் உள்ள தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் நியமனம் செய்வதற்கான தூண்டுதலை நிறுவனங்களுக்கு அளிக்கும் சீர்திருத்தங்களை ஆதரிக்கிறார். தொழிற்சாலை களின் உற்பத்திப் பொருள்களை அதிகரிக்கச் செய்வதற்காக, தொழிலாளர்களை நீக்கிவிட்டு, முதலீடு அதிகம் தேவைப் படும் தொழில்நுட்பங்களை அரசுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்துகின்றன. ஆனால், ஆற்றல் குறைந்த பணியாளர்களை இவ்வாறு மாற்றி நியமிப்பதற்கு மாறாக, புதிய கண்டுபிடிப்புகளை சமூக அளவில் மிகுந்த பயன் தரும் திசைகளில் அறிமுகப்படுத்தி தொழிலாளர்களின் ஆற்றலைப் பலப்படுத்த வேண்டும்.
அயல்நாட்டு முதலீடுகள் காரணமாக எரிபொருள் அல்லது எரிவாயு இயந்திரங்களின் பயன்பாட்டினால் உந்து தல் பெற்ற உலக மயமாக்கப்பட்ட நிதி ஆதாரம் முதலீட்டா ளர்களின் வாழ்க்கையை மிகமிக எளிதானதாக ஆக்கி விட்டது. ஆனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை அது மிகவும் கடினமானதாக ஆக்கிவிட்டது. இந்த விளையாட்டின் விதிகளை நிர்ணயம் செய்யும் ஆற்றல் செல்வந்தர்களான முதலீட்டாளர்களிடமும், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களிடமுமே குவிக்கப்பட்டிருக் கிறது. இந்த விதிகள் தொழிலாளர்களுக்கோ, சிறிய தொழில் முனைவோர்களுக்கோ ஆதரவு அளிப்பவையாக இல்லை. அவர்களிடம் மிகமிகக் குறைந்த அதிகாரங்கள் மட்டுமே உள்ளன என்பதுதான் இதன் காரணம். மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களது அமைப்புகளிலிருந்து ஒரு சிலரை மட்டுமே வேலைக்கு நியமிக்கின்றன. அதனால், தங்களது பாரம்பரியமான ஆதரவு தளங்களை தொழிற் சங்கங்கள் இழந்துவிட்டன. இந்த அதிகார சமன்பாடு மாற்றம் பெற வேண்டும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் சீர்திருத் தங்களை தங்களது தேவைகள் மற்றும் உரிமைகளைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியும், சிறு தொழில் முனை வோரும், தொழிலாளர்களும் மிகப் பெரிய சங்கங்களாக, புதிய வடிவங்களில் ஒன்று சேர்ந்து தங்களைத் தாங்களே அமைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: ‘தி இந்து’ 05-11-2020
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment