அமெரிக்க கரோனா கட்டுப்பாட்டு குழுவில் ஈரோட்டைச் சேர்ந்த செலின் ராணிக்கு இடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

அமெரிக்க கரோனா கட்டுப்பாட்டு குழுவில் ஈரோட்டைச் சேர்ந்த செலின் ராணிக்கு இடம்


ஈரோடு, நவ. 11- புதிய அமெரிக்க அதிபராக தேர்வு பெற்றுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கரோனா கட்டுப்பாட்டுக் குழுவில் ஈரோடு மாவட்டத் தைப் பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் செலின் ராணி உறுப் பினராக இடம்பெற்றுள்ளார்.


அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்க வுள்ள ஜோ பைடன் கரோ னாவைக் கட்டுக்குள் கொண்டு வர புதிய வழிகாட்டுக் குழு வினை அமைத்துள்ளார். 13 பேர் கொண்ட இக்குழுவின் தலைமைப்பொறுப்பில் 3 பேர் உள்ளனர். அதில் இந் திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மருத்துவர் செலின் ராணி (மிக வும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயம்) நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த 1998 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், எச்.அய்.வி. தொடர் பான மருத்துவ சேவை, ஆராய்ச்சி களை செலின் ராணி மேற் கொண்டுள்ளார். அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவில் உதவி இயக்குநராகவும் பணி யாற்றிஉள்ளார். நியூயார்க் பல்கலைக் கழகத்தின் கிராஸ் மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக செலின் ராணி தற்போது பணியாற்றி வருகிறார்.


செலின் ராணி குறித்து அவரது பெரியப்பா மகன் தங்கவேல் கூறியதாவது: செலின் ராணியின் தந்தை ராஜ்.


இவர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே பெரு மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1966 ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்று, போயிங் விமான நிறுவனத்தில் பணியாற்றி, அந்நிறுவன இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர். அந் நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வருகிறார்.


அவருக்கு 3 பெண் குழந் தைகள், அதில் மூத்தவர் தான் செலின் ராணி. இவர் அமெ ரிக்காவிலேயே பிறந்து வளர்ந் தவர். இதுவரை 4 முறை மொடக்குறிச்சி வந்துள்ளார். ராஜ் பவுண்டேசன் என்ற பெய ரில் மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மேம் பாட்டுக்கு பல்வேறு உதவி களை செய்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களை பாதிக்கும் நோய்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் ஆராய்ச்சி செய்துள்ளார். 35 வயதான செலின் ராணியின் கணவர் கிராண்ட், ஊடகவியலாள ராக பணியாற்றி வருகிறார் என்றார்.


No comments:

Post a Comment