வெள்ளகோவிலில் நடைபெற்ற "தீபாவளி" புரட்டு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

வெள்ளகோவிலில் நடைபெற்ற "தீபாவளி" புரட்டு கருத்தரங்கம்

வெள்ளகோவில், நவ. 11- திரா விடர் கழகம் சார்பில் ஆண்டு தோறும் நடைபெறும் நிகழ் வின் ஒருபகுதியாக வெள்ள கோவில் ஒன்றியம் நாகம நாயக்கன்பட்டி வீரமணி இல்லத்தில் 08.11.2020 ஞாயிற் றுக்கிழமை மாலை 5 மணிக்கு "தீபாவளி புரட்டு" கருத்தரங் கம் நடைபெற்றது.


வெள்ளகோவில் மு.நல்ல சிவம் தலைமை தாங்கினார். சார்ந்த பார்வதி நல்லசிவம் வரவேற்றார்.


நாகமநாயக்கன்பட்டி  திமுக அவைத் தலைவர் கந்த சாமி, ராஜன் (திமுக), ஆதித் தமிழர் பேரவை வெள்ள கோவில் நகர தலைவர் சிவ ரஞ்சனி, துணை தலைவர் யோகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மணிகண்டன் பார்ப்பனர் களால் கட்டவிழ்த்து விடப் பட்ட அடிப்படைவாதங்க ளையும், அவைகள் தற்போது பலமுனைகளில் நம்மீது தாக் குதல்கள் தொடுத்துவரும் சூழலையும் விளக்கி உரை நிகழ்த்தினார்.


பட்டாசு தொழிற்சாலை யில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் குமுறல்களை ஒரு கவிதை வாயிலாக வெளிப் படுத்தியும், பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை பட்டியலிட்டும் ஆதித் தமிழர் பேரவையின் திருப்பூர் கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர்  சாவித்திரி உரையாற்றினார்.


இவைதான் வேதங்கள், கோயில் கோபுரம் எதற்காக?, பாஜக ஆட்சியின் பூணூல் மயம், குழந்தைகளின் மீது ஜாதி, மதங்களை திணிக்கா தீர்!, "உண்மை" உள்ளிட்ட கழக நூல்கள் மாணவர்க ளுக்கு வழங்கப்பட்டது.


2021 ஜனவரியிலிருந்து ஒவ்வொரு மாதமும் பல்வேறு தலைப்புகளில் வெள்ளகோ வில்  நகர, ஒன்றிய பகுதிகளில் கழகத்தின் சார்பில் "அரங்கு கூட்டம்" நடத்துவதென கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ் இலக்கியா, விஜய சாரதி, சமீஸ், நிகிலன், கோகுல், கவு சல்யா, திவ்யா, ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளகோவில் நகர நிதி செயலாளர் சிவக் குமார், ஆதித்தமிழர் பேரவை காங்கயம் தோழர் ரத்தின சாமி, லட்சுமி முருகப்பன் ராம சாமி, அமுதா, துரைசாமி, பூங் கோதை உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


திராவிடர் மாணவர் கழகத்தைச் சார்ந்த ந.வீரமணி நன்றி கூறினார்.


No comments:

Post a Comment