காரைக்குடியில் திராவிட மாணவர் கழக சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

காரைக்குடியில் திராவிட மாணவர் கழக சந்திப்பு

காரைக்குடி, நவ. 11- காரைக்குடி மாவட்ட திராவிட மாணவர் கழகச் சந்திப்பு, விடுதலை சந்தா வழங்கும் நிகழ்வு மற் றும் தமிழர் தலைவர் பிறந்த நாள் குறித்து கலந்துரையா டல் கூட்டம் மாவட்டத் தலை வர் ச.அரங்கசாமி தலைமை யில், மண்டலத் தலைவர் சாமி திராவிடமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரரா சன் முன்னிலையில் கழக அலு வலகத்தில் நடைபெற்றது.


மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கழகத்தின் தற்கால செயல் பாடுகள் தலைவரின் ஓய்வறி யாத தொண்டறம் குறித்து கருத்துரை வழங்கினர்.


சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் தந்தை பெரியார் காலந்தொட்டு இன்று வரை திராவிடர் கழ கத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.


 மாவட்டக் கழகத்தின் சார்பில் 25 விடுதலை சந்தா வும், உண்மை ஓர் சந்தா வழங் கப்பட்டது.


கழகத் தலைவர் ஆசிரியரின் 88 ஆவது பிறந்தநாள் பரப்புரை நிகழ்வாக கருத்த ரங்கமும், நூல்அறிமுக விழா வும் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.


ம.கு.வைகறை மாவட்ட கழக செயலர், தலைமைக் கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, நகரத் தலைவர் ந.செகதீசன், நகரச் செயலாளர் திக.கலை மணி, திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர். அ.பிரவீன் முத்துவேல், சுந்தரம் ப.க, நலன் ஆகியோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment