வளர்ச்சியை விரும்பாத பீகார் மக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 10, 2020

வளர்ச்சியை விரும்பாத பீகார் மக்கள்

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத்திற்கான தேர்தல் மூன்று கட்டங் களாகத் நடைபெற்றது.


 கரோனா தொற்றிற்கு பிறகான இந்த தேர்தல் இந்தியா முழுவதுமே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.


 இந்த தேர்தலிலும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சினைகள் குறித்தும் பேசவில்லை. மோடி பாகிஸ்தான் புல்வாமா தாக்குதல் மற்றும் ராமர் கோவில் குறித்துப் பேசினார்.


அதே நேரத்தில் இளைஞர்கள் கூட்டணி என்று அழைக்கப்பட்ட காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியின் சார்பில் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் இருவரும் பீகாரின் இளைஞர்கள் பிரச்சினை குறித்துப் பேசினர். 


பகல் 12 மணிக்கான நேர வாக்கு எண்ணிக்கையின் படி பாஜக- ஜனதா தளக் கூட்டணி 122 இடங்களிலும், காங்கிரஸ்-ராஷ்டிர ஜனதா தளக் கூட்டணி 110 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.


ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 11 மணிக்குப் பிறகு பின்னடைவைச் சந்தித்தது,


 பாஜக தலைமையிலான கூட்டணியில் பாஜக கட்சி நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளக் கட்சியை விட அதிக இடங்களைப் பெற்று முன்னணியில் இருந்து வருவதால் நிதிஷ் குமார் ஆட்சிக்கு பாஜக பல நிபந்தனைகளை விதிக்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


No comments:

Post a Comment