புதுடில்லி, நவ. 8- தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர் வகுப் பைச் சேர்ந்தவர்களுக்கு எதி ரான அனைத்துக் குற்றங்க ளும் வன்கொடுமைத் தடுப்புச் சட் டம் 1989-இன் கீழ் வராது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத் தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் ஒருவர் ஹிதேஷ் வர்மா என்பவரது நிலத்தில் தாங்கள் நீண்ட ஆண்டு குத்தகை பெற்று பயிர்செய்து வருவதாகவும், திடீரென்று தாங்கள் பயிர் செய்துவரும் இடத்தில் கட்டு மானப் பொருட்களை கொட்டி தங்களை அங்கி ருந்து செல்லும் படி கூறிய தாகவும், தங்களுக்கு கால அவகாசம் தேவை என்று கேட்ட போது ஹிதேஷ் வர்மா தனது அடியாட்களுடன் வந்து தங்களை தாக்கியதாகவும், ஜாதி ரீதியாக அவதூறு பேசியதாகவும் குற் றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உத்தராகண்ட் உயர்நீதிமன் றம் ஹிதேஷ் வர்மா மீது வன்கொடுமை தடுப்புச் சட் டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்றும், நீதிமன்றத்தில் நேரில் வந்து விளக்கம் தரவேண்டும் என் றும் கூறியிருந்தது. இதனை அடுத்து அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ள வேண்டிய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் நீதி மன்றத்தின் வழக்கை எதிர் கொள்ளத் தேவையில்லை என்றும், அவர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய் யத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக நீதிபதி நாகேஸ்வரராவ் கூறும் போது "மற்றவர்களுக்குத் தெரியும் விதமாகப் பொதுவெளியில் அவமானப் படுத்தப்பட்டால் தான் அது குற்றம். இல்லாவிட் டால் அது குற்றம் இல்லை" என்று கூறியுள்ளார். இந்தத் தீர்ப்பை வழங்கி யுள்ள நீதிபதி நாகேஸ்வரராவ் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடர்ந்து தீர்ப்புகளை வழங்கி வருகிறார். இட ஒதுக் கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்று சொன் னதோடு இட ஒதுக்கீடு தொடர் பான எந்த வழக்கு உச்ச நீதி மன்றத்துக்கு வந்தாலும் அதை உடனடியாகத் தள்ளுபடி செய் தும் வருகிறார். இப்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய் யும் விதமாக இந்தத் தீர்ப்பையும் அளித்திருக்கிறார்.
No comments:
Post a Comment