காரைக்குடி பகுதிகளில் மாநில அமைப்பாளரிடம் 'விடுதலை' சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

காரைக்குடி பகுதிகளில் மாநில அமைப்பாளரிடம் 'விடுதலை' சந்தா வழங்கல்


8.11.2020 அன்று காரைக்குடியில் நடைபெற்ற திராவிட மாணவர் சந்திப்புக்கூட்டத்தில் மண்டல திராவிடர்கழகத்தலைவர் சாமி.திராவிடமணி 3 விடுதலை சந்தாக்களையும், கலைமணி நான்கு விடுதலை சந்தாக்களையும், பெருந்தகையாளர்  சுந்தரம் ஒரு விடுதலை சந்தாவையும், நகர திராவிடர் கழகத் தலைவர்  செகதீசன் ஒரு விடுதலை சந்தாவையும், திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர் அ.பிரவீன்முத்துவேல் ஒரு விடுதலை சந்தாவையும், நலன் ஒரு விடுதலை சந்தாவையும், பெரியார் தோட்டத்தில்  மண்டல தலைவர் சாமி திராவிடமணியின் பேத்தி இ.பெ.தமிழீழம், பேரன் ஜா.எ.டார்வின் தமிழ் ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆகியோரை நேசிக்கக் கூடிய ஓய்வு பெற்ற ஆசிரியர் பாதரக்குடி சுப.நாகராசன் ஒரு விடுதலை சந்தாவையும், மண்டல தலைவர் சாமி திராவிடமணியிடம் வழங்கினார்.  மாவட்டக் கழகத்தின் சார்பில் 25  விடுதலை சந்தாவும், ஒரு உண்மை  சந்தாவையும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். காரைக்குடி கழகத் தோழர் த.திருமேனி ஒரு விடுதலை சந்தாவையும்,  காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் எஸ்.முருகேசன் ஒரு விடுதலை சந்தாவும், உண்மை ஒரு சந்தாவினையும் மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமியிடம் வழங்கினார். உடன்: பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி,  சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், மண்டல செயலாளர் அ‌.மகேந்திரராசன், சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா.


No comments:

Post a Comment