பொருளாளர் கோ.சாமிதுரையின் நினைவு நாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 9, 2020

பொருளாளர் கோ.சாமிதுரையின் நினைவு நாள்!


நமது கெழுதகை நண்பரா? உடன்பிறவா சகோதரரா? என்று பிரித்துக் கூற முடியாத அளவு, கொள்கை உறவுகள் ரத்தப் பாசத்தையும் வென்றெடுத்த நட்பு - நம் நட்பு என்ற பெருமைக்குரிய சகோதரர், கழகத்தின் சிறப்புமிகு பொருளாளராகவும், தனது வழக்குரைஞர் தொழிலை விட்டு, பெரியார் திடலின் தொண்டையே தனது வாழ்நாளின் கடமை என்று முடிவு எடுத்து, நம்முடன் ஒன்றாகிவிட்ட அருமை சகோதரர் மானமிகு கோ.சாமிதுரை அவர்களின் மறக்கவொண்ணா நினைவு நாள்! (9.11.2013)


அவரது கொள்கைப் பயணத்தை அய்யா, அம்மா வழியிலும், போராட்ட முறையிலும், அறவழியில் தொடர்ந்து லட்சியப் பயண வெற்றியைக் குவிப்போம்!


பெரியார் பணி முடிப்போம். அடக்கமும், அமைதியும் நிறைந்த தோழர் மானமிகு பொருளாளர் கோ.சாமிதுரை நினைவைப் போற்றுவோம்!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


9.11.2020


No comments:

Post a Comment