எந்தக் கட்சி?
காமராஜர் வழியில் ஆட்சியை நடத்த விரும்புகிறோம். எம்.ஜி.ஆர். படத்தை எங்கள் யாத்திரையில் பயன்படுத்துவது தவறு இல்லை: - வானதி சீனிவாசன், தலைவர், பா.ஜ.க. தேசிய மகளிரணி.
காமராஜரை ஒரு பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரில் வைத்து எரிக்க முயற்சித்தவர்கள் யார் என்பது நாட்டுக்குத் தெரியும்.
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும்தான் தமிழ்நாட்டை மாறி மாறி ஆளும்; மற்ற கட்சிகளுக்கு இங்கு இடமில்லை என்று கறாராக சொன்னவர் எம்.ஜி.ஆர்.
இதில், மகளிரணி தேசியத் தலைவர் எந்தக் கட்சி?
மூன்றின் கூட்டுத் தொகை
யோகா சாமியார் என்று அழைக்கப்படும் ராம்தேவ் அறிமுகப்படுத்திய 'கொரோனில் கிட்' நான்கு மாதங்களில் ஈட்டிய லாபம் ரூ.241 கோடி.
உயர்ஜாதி + கார்ப்பரேட் + சாமியார் = மத்திய பி.ஜே.பி. ஆட்சி.
10%தான் முக்கியம்
40 மத்திய பல்கலைக் கழகங்களில் 80 விழுக்காடு எஸ்.சி., எஸ்.டி.,க்கான பேராசிரியர், இணைப் பேராசிரியர் இடங்கள் காலியாக உள்ளன.
உயர்ஜாதி ஏழைக்கான 10% பூர்த்தியாகி இருக்குமே!
கோமாதா - குலமாதா?
கறவை அல்லாத பசுக்கள் கோசாலைகளில் ஏற்கப்படுவதில்லை சாலைகளில் திரிகின்றன. குப்பைகள்தான் அவைகளுக்கு உணவு - கழிவு நீர்தான் அவை குடிக்கும் தண்ணீர்: - அலகாபாத் உயர்நீதிமன்றம்
கோமாதா எங்கள் குலமாதா என்று கொஞ்சுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. அதுவும் சாமியார் ஆளும் உ..பி.யில்!
பால் வார்க்கும் அறிவிப்பு!
5 லட்சம் இந்தியர்களுக்குக் குடியுரிமை: - அமெரிக்க புதிய அதிபர் முதல் அறிவிப்பு.
இந்திய மக்கள்வயிற்றில் பால் வார்த்த செய்தி.
தேர்தல் வாக்குறுதி என்றால் அரசியல்வாதிகள் காப்பாற்றுவார்களா என்ற கேலி - புதிய அதிபரைப் பொறுத்தவரை பொருந்தவில்லை என்பது பாராட்டுக்குரியதே!
உலகம் கதறுகிறது!
புழல் ஏரியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்.
நாடா இது?
வெட்கப்பட வேண்டும். மாசுகள்பற்றி உலகம் கதறுகிறது. 'பாரத' நாடோ?
No comments:
Post a Comment