''பாரதத்தில் நான்கு கார் டினல்கள், 31 ஆர்ச் பிஷப் கள் உண்டு. இவர்களில் ஒருவர்கூட பட்டியல் சமூகப் பின்னணியில் இருந்து வந் தவர் அல்ல. 18 பிஷப்புகளில் 11 பேர் மட்டுமே தலித் பின்னணி கொண்டவர்கள். தமிழகத்தில் 18 பிஷப்களில் ஒருவர் மட்டுமே தலித் பின்னணி கொண்டவர்!
- ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதம்', 6.11.2020, பக்கம் 20.
ஓர் உண்மையை ஆர்.எஸ்.எஸ். வார இதழ் ஒப்புக் கொண்டுவிட்டது. தலித் பின்னணி கொண்ட வர்கள் பிஷப்புகளாக வர முடியும் என்பதை விஜய பாரதம் ஒப்புக் கொண்டுள் ளதே!
இதன்மூலம் கிருஸ்து வத்தில் தலித்துகள் பிஷப்பு களாக வர முடியும். சாத்திரம் மற்றும் அமைப்பு முறைகள் உள்ள எந்த விதியும் அதனைத் தடை செய்ய வில்லை. ஆனால், அதே நேரத்தில் சங்கராச்சாரியார் களாக - தலித் பின்னணி கொண்டவர் மட்டுமல்ல - பார்ப்பனர் அல்லாத உயர் ஜாதியினர் என்று சொல்லிக் கொள்கிற ஒருவர் வர முடியுமா? சாத்திரம் மற்றும் அமைப்பு ரீதியான தடைகள் ஏதும் இல்லை என்று கூற விஜயபாரதங்கள் முன் வருமா?
1961 ஜூலையில் அமைச்சர் கக்கன் தலை மையில் நடந்த ஒரு பள் ளிக்கூட விழாவில் காகா கலேல்கர் (பிற்படுத்தப்பட் டோர் முதல் ஆணையத்தின் தலைவர் - (1953) பேசினார்.
''தீண்டாமை என்பது சமய சம்பந்தப்பட்டிருக்கிறது. அதை சமய சம்பந்தத்தி னால்தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும், உங் களிடம் பேசுகிறேன். நல்ல ஒழுக்கமுள்ள ஒரு ஹரி ஜனன் எப்போது சங்கராச் சாரியார் பீடத்தில் அமரு கின்றாரோ, அப்போதுதான் தீண்டாமை ஒழிந்ததாகவும் கருத முடியும்.'' என்று பேசிய துண்டு.
(மயிலைநாதன் எழுதிய ''பெரியார் படைத்த மனிதன்'', பக்கம் -23-24).
உடனே திராவிடர் கழ கத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் தலைவராக முடியுமா என்று வழக்கமாகக் கேள்வி எழுப்புபவர் உண்டு.
தாழ்த்தப்பட்ட ஒரு தோழர் திராவிடர் கழகத் திற்குத் தலைவராக வந்திட எந்தவித விதிமுறைகளும் தடையாக இல்லை. ஆனால், சங்கர மடத்தில் சங்கராச் சாரியாக வர விதிகளும், சாத்திரங்களும் தடையாக உள்ளன.
எனவே, இரண்டும் ஒன்றல்ல!
- மயிலாடன்
No comments:
Post a Comment