புதுடில்லி, நவ. 8- கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தை கள் கோவிட்-19 நெருக்கடியை சமாளிக்கவும், அவர் களின் பராமரிப்பாளர்களின் உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும், குறிப்பாக இளம் குழந்தைகளுக்கும் நகர்ப்புறங்களல் வாய்ப்புகளை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என அறிவித்துள்ளது.
அதற்காக மத்திய வீட்டு வசதி, மற்றும் நகர்ப்புற விவ காரங்கள் அமைச்சகம் அக்கம் பக்கங்களைச் செறிவூட்டல் திட்டம் என்ற சவாலை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 4.11.2020 முதல் வரவேற்கப்படுகின்றன.
நெதர்லாந்தை அடிப்படையாகக் கொண்ட பெர்னார்ட் வான் லீர் அறக்கட்டளை (BVLF) மற்றும் WRI இந்தியாவின் தொழில்நுட்ப ஆதரவுடன் இணைந்து 'அக்கம் பக்கத்தை செறிவூட்டல் சவால்' நிகழ்வை, வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகத்தின், ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் துவக்கியுள்ளது.
No comments:
Post a Comment