ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 8, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:     அமெரிக்க நாட்டின் 46ஆவது அதிபராக ஜோசப் ராபினெட் பைடன், சுருக்கமாக, ஜோ பைடன் 270 வாக்குகளுக்கு மேல் பெற்று பதவி ஏற்க உள்ளார். இந்திய வம்சாவளிப் பெண் கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி ஏற்கும் முதல் பெண் மணி ஆவார்.  


    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆர்.ஜே.டி. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கணிப்பில் தெரிய வந்துள்ளது.    


அமெரிக்காவில் டிரம்ப் அரசுக்கு ஆதரவாக பாஜக வெளி நாட்டுப் பிரிவு பிரச்சாரம் செய்த நிலையில், தற்போது, இந்தியாவில் காஷ்மீர் பிரச்சினையில் அரசுக்கு எதிராக கருத்து சொன்ன கமலா ஹாரிஸ், செனட்டராக பிரமிளா ஜெயபால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவதை நினைவில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என மூத்த பத்திரிக்கையாளர் ஆகார் படேல் எழுதியுள்ளார்.



இந்தியன் எக்ஸ்பிரஸ்:     தலைமைத்  தகவல் ஆணையராக யஷ்வர்த்தன் குமார் சின்ஹா குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தகவல் ஆணையர்களாக உதய் மகுர்கர், ஹீராலால் சமன்யா, சரோஜ் புன்ஹானி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.    


 


இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை யென்றால், வருகிற நவம்பர் 9ஆம் தேதி முதல் போராட்டம் மீண்டும் நடத்தப்படும் என குஜ்ஜார் சமூக அமைப்பின் தலை வர் கலோனல் கிரோரி சிங் பைன்ஸ்லா தெரிவித்துள்ளார்.    


ரிபப்ளிகன் டிவி தலைமை நிர்வாக அதிகாரி அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு மோடி அரசின் பல அமைச்சர்கள், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான நடவ டிக்கை என சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தற்போதைய ஆட்சியில் பல பத்திரிக்கையாளர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை  நினைவில் கொள்ள வேண்டும் என மூத்த பத்திரிக் கையாளர் தல்வீன் சிங் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:    


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றது, வலது சாரி சக்திகளும், மக்களிடம் வெறுப்பையும் பிளவையும் உண் டாக்கும் சக்திகளும், வரலாற்றில் டிரம்பைப் போல வெளியேற் றப்படுவார்கள் என்கிற நம்பிக்கையைத் தந்துள்ளது என காஷ் மீர் மக்கள் ஜன நாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா டிவிட் டரில் வாழ்த்துச் செய்தியில் பதிவிட்டுள்ளார்.



குடந்தை கருணா
8.11.2020


No comments:

Post a Comment