திருத்துறைப்பூண்டி கழக மாவட்ட தோழர்கள் 'விடுதலை' சந்தா வழங்கல்  - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 8, 2020

திருத்துறைப்பூண்டி கழக மாவட்ட தோழர்கள் 'விடுதலை' சந்தா வழங்கல் 


ஆயக்காரன்புலம் வட்டார பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முத்துசாமி - மகேஷ்வரி  இணையரின் மகன் திலீபன் நீட்  தேர்வில் 579 மதிப்பெண்கள் பெற்றார். பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்  திலீபனை பாராட்டி பயனாடை அணிவித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார். இதன் மகிழ்வாக ஒரு சந்தா வழங்கல் விடுதலை சந்தாவை முத்துசாமி வழங்கினார். மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், மாவட்டச் செயலாளர் சு.கிருட்டிணமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன், கார்த்திக் பிரபாகரன் உடனிருந்தனர். ஆயக்காரன்புலம்  ஊராட்சி மன்றத் தலைவர் யாசர்அராபத் அண்ணாதுரை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ஒரு விடுதலை சந்தாவை வழங்கினார்.  



ஆயக்காரன்புலம்   ஆசிரியர் ஆ.பா.தர்மதுரை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ஒரு விடுதலை சந்தாவை வழங்கினார்.  ஆசிரியர் ஆ.பா.தர்மதுரை ஒரு விடுதலை  சந்தாவையும்,  வேதாரண்யம் ஒன்றியச் செயலாளர் சி.பஞ்சாபகேசன் மூன்று விடுதலை சந்தாக்களையும், பெரியார் பெருந்தொண்டர் பஞ்சநதிக்குளம் புலவர் சீ.கனகசுந்தரம் ஒரு விடுதலை சந்தாவையும், ஊராட்சி மன்றத் தலைவர் பானுமதி சுப்பிரமணியன் ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் புயல்குமார்  ஒரு விடுதலை சந்தாவையும், புஷ்கரனி பாஸ்கரன் ஒரு விடுதலை சந்தாவையும், நகரத் தலைவரும் பொதுக்குழு உறுப்பினருமான தி.குணசேகரன்  நான்கு விடுதலை சந்தாக்களையும், மாவட்டத் தலைவர் ஆயக்காரன்புலம்  கி.முருகையன்- மல்லிகா ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், மாவட்டச் செயலாளர் சு.கிருட்டிணமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன். ருமேனியா.


No comments:

Post a Comment