சென்னை, நவ. 9- தமிழகத்தில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால் கரோனா சூழலை கருத்தில்கொண்டு மதம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாதென்று தமிழக அரசு உத்தரவிட்டது.
தொடர்ச்சியாக பாஜக வினர் நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கும் தடை விதித் தது. ஆனால். தடையை மீறி யாத்திரை செல்வோம் என தெரிவித்த மாநில பாஜக தலைவர் எல். முருகன் கடந்த 6 ஆம் தேதி திருத்தனியில் வேல் யாத்திரையை தடையை மீறி நடத்த முயன்றார். அப் போது காவல்துறையினருக் கும், பாஜகவினருக்கும் கைக லப்பு ஏற்பட்டு பாஜகவினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சென் னையில் இன்று எல்.முருகன் தலைமையில் வாகனங்கள் மூலம் பாஜகவினர் வேல் யாத்திரை சென்றனர். இத னால், பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ் சாலையில் பெரும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் வழி கிடைக்கா மல் சில மணி நேரம் வரை நெரிசலில் சிக்கி பரிதவித்தது. அந்த நிகழ்வினை வீடியோ எடுத்த சிலர் சமூக ஊடகங் களில் பதிவிட்டுள்ளனர்.
அரசு மற்றும் காவல் துறையின் எதிர்ப்பை மீறியும் பாஜகவினர் வேல் யாத்திரை செய்ய தொடர்ச்சியாக முயற் சிப்பது கடும் கண்டனத்துக் குளாகியுள்ளது. இதற்கிடை யில் 2 வது நாளாக தடையை மீறி வேல் யாத்திரை நடத்த முயற்சித்த எல்.முருகன் மற்றும் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கைது செய்யப் பட்டார். தொடர்ந்து சென்னை திருவொற்றியூர் வடிவுடை யம்மன் கோயிலில் இருந்து வேல் யாத்திரையை தொடர விருந்த பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment