உடல் நலம் விசாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 9, 2020

உடல் நலம் விசாரிப்பு


அறந்தாங்கி கழக மாவட்டம் ஆலங்குடி புதுக்கோட்டை விடுதி கிராம கிளைக் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் க.இராமசாமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நலம் காண அவர் இல்லத்திற்கு 7.11.2020 அன்று புதுக்கோட்டை மண்டல கழகத் தலைவர் பெ.இராவணன் பயனாடை அணிவித்து பாராட்டி, உடல் நலம் விசாரித்தார். கிளைக் கழகச் செயலாளர் வீ.தங்கவேல் உடன் இருந்தார். அவருக்கு 82 வயதாகிறது. சில போராட்டங்களில் கலந்து கொண்டவர். தந்தை பெரியார்மீது மிகுந்த பற்றும்கொண்டவர்.


No comments:

Post a Comment