நவ்சாரி, நவ. 9- பாஜக ஆளும் குஜராத்தில் பேய் ஓட்டுவதா கக் கூறி, ரூ.50ஆயிரம் பணத் தையும் வசூலித்த சாமியார் இளம்பெண், அவரது சகோ தரியான சிறுமி இருவரிடமும் பாலியல் வன்முறையில் ஈடு பட்டுள்ளார். இதுகுறித்து பெண்களின் தந்தை அளித்த புகாரின்பேரில் சாமியாரும், அவரது உதவியாளர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள் ளனர்.
விஷ்ணு நாயக் என்ற அந்த சாமியார், மராட்டிய மாநிலம் நந்தர்பார் மாவட் டத்தைச் சேர்ந்தவர். அவரை தனது குடும்பப் பிரச்சினை களைத் தீர்க்குமாறு, குஜராத் கன்டேவி நகரத்தைச் சார்ந்த 2 பெண்களின் தந்தை அணு கியுள்ளார்.
அப்போது, அவரது 2 மகள்களுக்கும் பேய் பிடித் திருப்பதால்தான் குடும்பத் தில் பிரச்சினை ஏற்படுகிறது என்றும், அவர்களுக்கு பேய் ஓட்டும் சடங்குகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் சாமியார் விஷ்ணு நாயக் கூறி யுள்ளார். பேய் ஓட்டுவதற்காக அவர் ரூ.50 ஆயிரமும் வசூ லித்துள்ளார்.
பேய் ஓட்டுவதற்காக அப் பெண்களை அவர்களது தந்தை, சாமியாரின் இருப் பிடத்தில் விட்டுச் சென்றுள் ளார். அப்பெண்களை சாமி யார் பலமுறை பாலியல் வன் முறையில் ஈடுபட்டுள்ளார். இரண்டு மாதம் கழிந்த நிலை யில், பெண்கள் இருவரும் கர்ப்பமடைந்தது அவர்களது குடும்பத்துக்கு தெரியவர, அதிர்ச்சி அடைந்தனர். பெண்களின் தந்தை அளித்த புகாரின் பேரில், கன்டேவி காவல்துறையினர், சாமியா ரையும், அவரது உதவியாளர் கள் 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
No comments:
Post a Comment