தி.மு.க. தலைமையிலான தோழமைக் கட்சிகள் தீர்மானம்
சென்னை,நவ.7, பா.ஜ.க.வுடன் இனிமேல் ஊடக விவாதங்களில் பங்கேற்பதில்லை என திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடக கண்காணிப்பு குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்பு குழுக் கூட்டம், அதன் ஒருங்கிணைப்பாளர் பேரா.கான்ஸ் டன்டைன் தலைமையில் நேற்று (6.11.2020) இணைய வழியில் நடந்தது.
கூட்டத்தில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, காங்கிரஸ் கட்சி கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்ட கட்சி மகேந்திரன், இந்திய கம்யூ னிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி கனகராஜ், மதிமுக மல்லை சத்யா, விடுதலை சிறுததைகள் கட்சி ரவிக்குமார் எம்.பி., இந்திய யூனியன் முசுலீம் லீக் அப்துல் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி அப்துல் சமது, சூர்ய மூர்த்தி (கொமதேக) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
ஊடக விவாதங்களில் பாஜக சார்பில் பங்கேற்போர் தரம்தாழ்ந்த முறையில் கருத்துகளை தெரிவிப்பதோடு, தனிநபர் தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர். அவர்களால் தமிழ் தொலைக்காட்சி ஊடக விவாதங் களின் தரம் சரிந்து கொண்டே போகிறது. எல்லா அரசியல் கட்சி களின் பிரதிநிதிகளையும் விவாதத் துக்கு அழைக்கவேண்டியது ஊடகங் களில் கடமை என்றாலும், தரம் தாழ்ந்த விமர்சனங்கள், தனிநபர் தாக்குதல்கள் முதலானவற்றை தடுக்க வேண்டியதும் அவர்களுடைய கடமையே. மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிற காரணத்தினாலும், அவர் களுடைய அச்சுறுத்தலின் காரண மாகவும் ஊடக நிர்வாகத்தினர் இதில் நடுநிலையோடு செயல்பட முடியாத சூழல் இருக்கிறது. இதை இப்படியே அனுமதிப்பது தமிழ கத்தின் அரசியல் சூழலைப் பாழ் படுத்தி விடும் என்று அஞ்சுகிறோம். எனவே, பாஜக பிரதிநிதிகள் பங்கேற்கும் ஊடக விவாதங்களில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுடைய பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை. மேலும், ஊடக விவாதங்களில் பங்கேற்போர் தாம் தெரிவிக்கும் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின் றனர். இதனால், தொலைக்காட்சி சேனல்களுக்கு விளம்பரம் அதிகமாக கிடைக்கிறதே தவிர நட்டம் எதுவும் இல்லை. ஆனால், இப்படி பகிரும் போது அதை சட்டவிரோதம் என் றும், அது தொலைக்காட்சி சேனல் களின் அறிவுசார் சொத்துரிமைக்கு எதிராக இருக்கிறது என்றும் சில ஊடக நிறுவனங்கள் தாக்கீது அனுப்புகின்றன.
இது ஊடக விவாதங்களில் பங்கேற்று கருத்து சொல்வோரின் உரிமையை பறிப்பதாக உள்ளது. எவர் ஒருவரும் தான் சொல்லும் கருத்து அதிகமானவர்களை சென் றடைய வேண்டும் என்றே விரும்புவர். அதிலும் சமூக ஊடகங்கள் தொலைக் காட்சி ஊடகங்களுக்கு இணையாக மக்களிடையே செல்வாக்கு செலுத்தி வரும் நிலையில் இப்படி கருத்துகளை பகிர்வதை தடைசெய்வது ஏற்பு டையது அல்ல. எனவே, ஊடக நிறு வனங்கள் இதுபற்றிய தமது நிலைப் பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment