ஆந்திர நாத்திக அறிஞர் கோராவின் மகள் நவகோரா மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 8, 2020

ஆந்திர நாத்திக அறிஞர் கோராவின் மகள் நவகோரா மறைவு


தமிழர் தலைவர் இரங்கல் தெரிவித்தார்


விஜயவாடாவில் நாத்திகர் மய்யத்தை நிறுவிய நாத்திக அறிஞர்  கோரா அவர்களின் மகள் நவகோரா (வயது 72) நேற்று (7.11.2020) அதிகாலை உடல் நலக் குறைவால் விஜய வாடாவில் காலமானார்.


கொடுமையான கரோனா தொற்று காலத்தில் கோரா அவர் களின் மகன் டாக்டர் விஜயம் அவர்களின் மரணத்தை அடுத்து நாத்திகர் மய்யத்திற்கு ஏற்பட்ட அடுத்த இழப்பு. நாத்திகர் மய்யத்தின் பணிகளில் முழு நேரமாக தன்னை ஈடுபடுத்தி நவகோரா சேவை ஆற்றி வந்தார். மகளிர் மற்றும் குழந்தை களுக்கான உரிமைப் போராட்டப் பணியில் குறிப்பாக ஏழை, ஒடுக்கப் பட்டோரின் உரிமைக்கான சேவைப் பணியில் ஆந்திரா மற்றும் தெலங் கானாவின் கடற்கரையோரப் பகுதி களில் ஈடுபட்டு வந்தார்.


விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் நிகழ்ச்சிகளுக்கு, தமிழர் தலைவரும், கருஞ்சட்டை தோழர்களும் செல்லும் போதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பல் பண்பினைப் பாராட்டியவர்.


நவகோரா அவர்களின் மறைவுச் செய்தியை கோரா அவர்களின் பெயரன் விகாஸ் கோரா தெரிவித்தார். உடனே தமிழர் தலைவர் கோராவின் இளைய மகன் டாக்டர் கோ. சமரம் அவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கோரா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, இரங்கல் தெரிவித்தார். தமிழர் தலைவரின் இரங்கல் செய்தி விஜயவாடா நாத்திகர் மய்யத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டது.  


No comments:

Post a Comment