டெக்கான் கிரானிக்கல், சென்னை:
குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றிட உறுதி பூண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயற்பியல், வேதியியல் துறைகளில் ஆய்வு செய்த இரு பெண்கள் இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ளனர். அய்.அய்.டி.யில் முனைவர் பட்டம் பெற்றதில் மூன்றில் ஒருவர் பெண்கள். பெண்களுக்கு கணிதம் கற்பது கடினம் என்ற பல்லாண்டு மூட நம்பிக்கையை இவர்கள்:சாதனை முறியடித்துள்ளது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
தமிழ் நாட்டில் உள்ள விமான நிலையங்களிலும், வருகை தரும் விமானங்களிலும், வருகிற பொங்கல் தினத்திற்கு முன்பு தமிழில் அறிவிப்புகள் இருக்கும் என தமிழ் நாடு அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு மேற்கு வங்கத்தில் உணவு அருந்த நேரமிருக்கிறது. ஆனால்,. உபியில் ஹத்ராஸ் தாழ்த்தப்பட்ட பெண் மரணம் குறித்து அந்த குடும்பத்தார்க்கு ஆறுதல் சொல்ல நேரம் இல்லை என மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாடியுள்ளார்.
தி டெலிகிராப்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் தில்லுமுல்லு நடந்துள்ளதாக ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டினை அதிபர் டிரம்ப் தெரிவிப்பதால், அவரது பேட்டியை ஏபிசி, சிபிஎஸ், , என்.பி.சி. ஆகிய தொலைக்காட்சி ஊடகங்கள் ஒளிபரப்ப மறுத்துள்ளன.
கேரளாவில் ஏறத்தாழ 1200 கோயில்களைப் பராமரித்துவரும் திருவாங்கூர் தேவஸ்தானம், முதன்முறையாக, 18 பட்டியிலனத்தவரையும், ஒரு பழங்குடியினரையும் பகுதி நேர அர்ச்சகராக நியமிக்க முடிவு செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பழங்குடி மக்களின் தலைவராக இருந்த பிர்சா முண்டா சிலைக்கு மாலை அணிவிப்பதாக நினைத்துக் கொண்டு, வேறு சிலைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மாலை அணிவித்ததை, திர்னாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக சாடியுள்ளனர். பழங்குடி மக்களின் கலாச்சாரம், வரலாறு பாஜகவினர்க்கு தெரியவில்லை என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
குடந்தை கருணா
7.11.2020
No comments:
Post a Comment