ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

தி இந்து:



  • பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக நிதிஷ்குமார் தலை மையிலான அய்க்கிய ஜனதா தள கூட்டணி அணி 125 இடங்கள் பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. ஆர்.ஜே.டி. தலைமையிலான கூட்டணி 110 இடங்களையும், உவைசி கட்சி 5 இடங்களையும், சிராக் பஸ்வான் கட்சி ஒரு இடத்தையும் வென்றுள்ளது.


டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:



  • மகாராட்டிராவில் சென்ற தேர்தலில் வாக்குறுதியை பாஜக மீறினால் என்ன நடக்கும் என சிவசேனா காட்டியுள்ளது. இது தற்போது பீகார் தேர்தலில் நிதிஷ்குமார் கட்சி குறைந்த இடங்களில் வெற்றி பெற்றாலும், அவர் முதல்வராவதற்கு உதவியாக இருக்கும் என சிவசேனா கட்சியின் தலைவர் ராவட் தெரிவித்துள்ளார்.

  • பீகார் அரசியலில் ஆர்.ஜே.டியின் தேஜஸ்வி யாதவ் தவிர்க்க முடியாத பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார்.


டெக்கான் கிரானிக்கல், சென்னை:



  • அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் அமைத்த கொரோனா தடுப்பு சிறப்புக் குழுவில் ஈரோடு பெண் மருத்துவர் செலின் இடம் பெற்றுள்ளார்.

  • அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியில், இன ஒற்றுமை, கொரோனா தடுப்பு நடவடிக்கை, மாறிவரும் பருவ நிலை இவற்றோடு, பணியில் இருக்கும் குடும்பங்கள் குறித்தும் நல்ல நடவடிக்கைகள் எடுத்து புதிய அமெரிக்காவைப் படைப்போம் என துணை அதிபராக பொறுப்பேற்கும் கமலா ஹாரிஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் வேல் யாத்திரையை எப்படி பாஜக நடத்துகிறது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அது கோயில் யாத்திரை அல்ல; அரசியல் யாத்திரை என அரசின் சார்பில் டிஜிபி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

  • பீகார் தேர்தலில் ஏழு லட்சம் பேர் ’நோட்டா’விற்கு வாக்களித்துள்ளனர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • பீகார் தேர்தலில் ஆர்.ஜே.டி. கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் 16 இடங்களை வென்றுள்ளனர். அக்கட்சிகளுக்கு 50 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 70 இடத்திற்கு பதிலாக 50 இடங்களையும் ஒதுக்கியிருந்தால், முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும். இடது சாரி கட்சிகள் பாஜகவை எதிரியாக நினைத்து மேற்கு வங்கத்தில் அரசியல் செய்ய வேண்டும் என சிபிஅய் (எம்.எல்.) கட்சியின் தலைவர் திபங்கர் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

  • பீகார் தேர்தல் வெற்றி மூலம் பாஜக தனது செல்வாக்கை பிற மாநிலங்களிலும் செலுத்த முயலும். அதற்கேற்ப தனது ஹிந்துத்வா கோட்பாட்டை முன்னிறுத்தும் என மூத்த பத்திரிக் கையாளர் சுகாஷ் பல்சிகார் தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.


தி டெலிகிராப்:



  • பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 70 இடங்களில் 19 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.


குடந்தை கருணா


11.11.2020


No comments:

Post a Comment