பெரியார் கேட்கும் கேள்வி! (190) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 15, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (190)

எண்ணி முடியாத கடவுள்கள் தோன்றி இருப்பதோடு, தோன்றிய வண்ணம்தானே இருக்கின்றன கடவுள்களுடைய அற்புதங்கள் இக்காலத்தில் நடக்காத நாள் ஏது? மனிதர்களி டத்தில் கடவுள்கள் பேசாத நாள் ஏது?  அசரீரியும், சோதனை களும் நடக்காத நாள் ஏது? இப்படி எல்லாம் இருக்கும்போது இக்காலத்தில் கடவுள் நேரில் வந்து உன்னையோ அல்லது என்னையோ கூப்பிட்டு நேரில் அடே, மக்களா! நான்தாண்டா சாஸ்திரம் சொன்னேன்; சந்தேகப்படாதீர்கள்! என்று சொல்லித் தொலைத்தால் பிறகு உலகில் ஏதாவது கலவரம் இருக்க முடியுமா? அல்லது ரமணரிஷிகள் என்ன, சாயிபாபாக்கள் என்ன, மகாத்மாக்கள் என்ன, மற்றும் தெய்வீக சக்தி பெற்ற வர்கள் என்று சொல்லப்படும் மகான்கள் என்ன - இத்தனை பேர்களில் யாரிடமாவது ஒரு வார்த்தை சொல்லித் தொலைக் கக் கூடாதா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 07.10.1944

மணியோசை

No comments:

Post a Comment