டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· மோடி அரசின் கவுரவ யுக்தி, பெரும் முதலாளிகளுக்கு சாதகமாகவும், ஏனையோரை கண்டுக் கொள்ளாமலும் இருக்கச் செய்கிறது என ஆகார் படேல் தனது கட்டுரையில் குறிப்பிடு கிறார்.
· மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் மேலும் தங்களது போராட்டத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
· நூறு மாணவர்களுக்கும் மேலாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக சென்னை அய்.அய்.டி. கல்லூரி மீண்டும் மூடப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அங்கம் வகிக்கும் பாரதீய கிஷான் சங், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்துகிறது.
· ஆயுர்வேத மருத்துவர்கள் எந்த பயிற்சியும் இன்றி அறுவை சிகிச்சை நடத்திட அனுமதிப்பது தவறு என ஆயுஷ் அமைப்பின் மேனாள் செயலாளரும், டில்லி அரசின் சுகாதாரச் செயலாளருமான மருத்துவர் சைலஜா சந்திரா தனது கட்டுரை யில் விரிவாக கூறியுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· வேளாண் சட்ட எதிர்ப்பு காரணமாக டில்லியின் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைப் புள்ளிகளில் கடந்த 17 நாட்களாக ஏற்பட்டுள்ள சாலை போக்குவரத்து சிரமத்திற்கு பொதுமக்களிடம் கைகூப்பி மன்னிப்பு கோருவதாக போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தி ஹிந்து:
· மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு எதேச் சதிகாரத்துடன் நடந்து கொள்கிறது. கூட்டாட்சி முறையில் மாநிலங்களுக்கு அரசியல், பொருளாதார, நிர்வாக அதிகாரம் என அனைத்தும் இருத்தல் வேண்டும். தற்போது அனைத்து ஒற்றைத்தலைமையில் மத்தியில் எதேச்சதிகார ஆட்சி நடை பெறுகிறது என அகாலி தளக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறியுள்ளார்.
தி டெலிகிராப்:
· டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், நமது அவ நம்பிக்கையால் அனைவரும் எவ்வளவு தவறு செய்தோம் என்பதை உணர்த்தியுள்ளது. நாம் ஒன்றுபட்டு உரிமைகளை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வெல்ல முடியாத எதிரி என கருதப்பட்டவரை வெல்ல முடியும் என்று காட்டியுள்ளது என பொருளாதார பேராசிரியர் அமித் பாதுரி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
· பொருளாதார மற்றும் சமூக நிச்சயமற்ற தன்மைகளால் பாதிக்கப்பட்டுள்ள உலகில், விவசாயிகள் நீண்டகாலமாக நிலவும் விவசாய நெருக்கடிக்கு மத்தியில் பொய்யான வாக்குறுதிகள் அவர்களுக்கு வழங்கப்படுவதால் விவசாயிகள் திணறுகிறார்கள். ஒரு நேர்மையான உரையாடல் அவர்களின் அச்சங்களை உறுதிப்படுத்தியிருக்கலாம். ஆனால் உரையாடல் களால் முடிவு ஏற்படாதபோது, போராட்டங்கள் தானே மாற்றம் என கட்டுரையாளர் ஜெய்தீப் ஹர்தீகர் கருத்திட்டுள்ளார்.
குடந்தை கருணா
15.12.2020
No comments:
Post a Comment