சென்னை அண்ணாசாலை பெரியார் பாலம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்: தி.மு.க பொறுப்பாளர்கள். ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை.
சமூகநீதிக்கான கி. வீரமணி விருது & 2020, பெற்ற எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவனுக்கும், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் நிர்வாகிகள் ஆள் உயர மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்கள் பெரியார் நினைவிடத்தில் மாலை வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை அண்ணாசாலை பெரியார் பாலம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மகளிர் அணியின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி அண்ணாசாலையிலுள்ள பெரியார் சிலை அருகில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வழியாக பெரியார் திடலுக்கு பெரியார் பட அமைதி ஊர்வலம்.






No comments:
Post a Comment