ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 24, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     வேளாண் சட்டத்தை ரத்து செய்வது குறித்து எழுத்துப் பூர்வமான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என வேளாண் சட்டங் களை ரத்துச் செய்யக்கோரி டில்லி அருகே போராடும் விவசாய அமைப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன.

·     மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தங்களது போராட்டத்தில் கலந்து கொள்ள விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     தாழ்த்தப்பட்டோர்க்கு மெட்ரிக் படிப்புக்குப் பின்னர் அளிக்கப்படும் ஊக்கத்தொகையை அதிகரிக்க மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 4 கோடி தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பயனடைவர் என அரசு கருதுகிறது.

·     வயது வந்த இருபாலரும் தங்கள் விரும்பியவரை மணம் செய்து கொள்ளலாம் என்றும், திருமணத்திற்கு முன்பாக விரும்பி மதம் மாறினாலும் யாரும் தடுக்க முடியாது எனவும் கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மேற்கு வங்கத்தை குஜராத்தாக மாற்ற முடியாது. வங்காளிகள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக தலைவர்களுக்கு பதிலடி தந்துள்ளார்.

குடந்தை கருணா

24.12.2020

No comments:

Post a Comment