திண்டுக்கல் இரா.வீரபாண்டியன் இல்ல மண விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 17, 2020

திண்டுக்கல் இரா.வீரபாண்டியன் இல்ல மண விழா

காணொலியில் தமிழர் தலைவர் வாழ்த்து

திண்டுக்கல், டிச. 17- திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் இரா.வீரபாண்டியன் அவர்களின் அண்ணன் இரா.மதுரைவீரன் - .பரமேஸ்வரி இணையரின் செல்வன் .இளையராஜா, மதுரை .ஈஸ்வரன் - .இராசாத்தி இணை யரின் செல்வி .திலகவதி ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழா திண்டுக்கல் - மதுரை சாலை சாத்தங்குடி நாடார் உறவின்முறை திருமண மகாலில் 26.11.2020 அன்று காலை 9.15 மணியளவில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.

இணையேற்பு விழாவை திரா விடர் கழக அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் தலைமை யேற்று உறுதி மொழி கூற, திராவிட முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் .பெரியசாமி இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம் இணைப்புரை வழங்கினார். திமுக துணைப் பொதுச்செயலாளர் .பெரியசாமி உரையில், இன்றைய சூழ்நிலையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வித் தரம், மருத்துவம் ஆகியவற்றில் உயர்வதற்கு காரணம் தந்தை பெரி யார்தான். இடஒதுக்கீடு முறை கொண்டு வருவதற்கு காரணம் தந்தை பெரியார் தான். சுயமரி யாதை திருமணத்தை தந்தை பெரி யார் கொண்டுவந்ததை பேரறிஞர் அண்ணா சட்டமாக்கினார். அது இன்று வரை தொடர்கிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலை ஞர் பற்றி பல்வேறு செய்திகளை எடுத்துக்கூறி மணமக்களுக்கு வாழ்த்துக்கூறி உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர், கழக செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு, கழகப் பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ், ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள்.

இணையேற்பு விழாவில் முன்னாள் நீதியரசர் கருப்பையா, மண்டலத் தலைவர் மு.நாகராசன், மாவட்ட செயலாளர் பெ.கிருஷ் ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் .கருணாநிதி, அமைப் பாளர் பழ.இராசேந்திரன், நகரத் தலைவர் .மாணிக்கம், செயலா ளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன், பொதுக்குழு உறுப் பினர் இரா.நாராணன், பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலாளர் மு.செல்வம், கே.ஜி.எஸ்.ஜீவானந் தம், செபாஸ்டின், சின்னப்பன், கே. ஆர்.காஞ்சித்துரை, வழக்குரைஞர் கு.பா.சாக்ரட்டீஸ், தாடிக்கொம்பு சதாசிவம், வேடசந்தூர் சி.மாரி யப்பன் உள்ளிட்ட .ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தி,மு,, காந்திராஜன், தொ.மு.. பேரவை .பசிர்அகமது, நகரச் செயலாளர் இராசப்பா, துணைச் செயலாளர் இராஜா, பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் மு.அன் பழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் .விஜயன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.காமாட்சி உள்ளிட்ட ஏராள மான தோழர்களும், மதுரை மண் டல செயலாளர் நா.முருகேசன், மாவட்ட தலைவர் .முருகா னந்தம், பழக்கடை முருகானந்தம் உள்ளிட்ட கழக தோழர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அன்பரசு, மைதீன்பாவா உள்ளிட்ட தோழர் களும், மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் செல்வராகவன், நகரச் செயலாளர் டி.செல்வேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment