சமஸ்கிருத “கட்டாய ஒளிபரப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது!” மத்திய அரசின் சுற்றறிக்கை ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 17, 2020

சமஸ்கிருத “கட்டாய ஒளிபரப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது!” மத்திய அரசின் சுற்றறிக்கை ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்

'தி டைம்ஸ் ஆப் இந்தியா'வில் முன்னாள் துணை சொலிசிட்டர் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் கட்டுரை!

சமஸ்கிருத மொழியில் கட்டாயமாகச் செய்தி வாசிக்க வேண்டும் என்று மத்திய அரசின் 'பிரச்சார் பாரதி ' பிறப்பித்துள்ள சுற்றறிக்கை இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் உணர்வுக்கு எதிரானது. அது இந்திய ஜன நாயகத்துக்கு எதிரான அச் சுறுத்தல். இதை தமிழ்நாடு ஜன நாயக வழியில் எதிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்திற் கான இந்தியாவின் முன்னாள் துணை சொலிசிட்டர் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளேட்டில் (16.12.20) "மீண்டும் மொழிகளின் யுத்தம்!” என்ற பெருந்தலைப்பின் கீழ் "மத்திய அரசின் பிரச்சார் பாரதிமண்டல சேட்லைட் சேனல் களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை யால் சர்ச்சை எழுந்துள் ளது என்று குறிப்பிடப்பட்ட செய்தியில்கட்டாய மான சமஸ்கிருத ஒளிபரப்புக்கான உத்தரவு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கு எதிரா னது!” என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டு ரையில் கூறியிருப்பதாவது:

நாட்டின் பொதுச்சேவை ஒளி பரப்பு அமைப்பின் அறிவிப்பை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பையே தகர்க்கும் வகையில் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கொள்கையின் வேரையே தாக்கும் வகையில் அமைந்துள்ளது.

அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட

மொழியைத் திணிக்க முடியாது!

இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் 343ஆவது பிரிவு, தேவநாகரி எழுத்தில் உள்ள இந்தியை மத்திய அரசின் அலுவல் மொழியாக அங்கீகரித்துள்ளது. எட்டாவது அட்டவணை இந்தியாவின் 22 அலுவல் மொழிகளைக் கொண்டுள்ளது. இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் 29ஆவது பிரிவு நாட்டில் உள்ள மொழி வழியிலான வேற்றுமையைப் பாதுகாக்கிறது. அதிலும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய மொழியைப் பாதுகாத்துக் கொள்வதற் கான உரிமையைப் பெற்றுள்ளனர் என்று குறிப் பிடப்பட்டுள்ளது. இது அர சாங்கம் ஒரு குறிப்பிட்ட மொழியைத் திணிக்க முடியாது என்ற செய்தியைத் தெளிவாகச் சொல் கிறது.

சமஸ்கிருதம் அலுவல் மொழிகளில் ஒன்றுக்கான இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த குடிமக்கள் கணக் கெடுப்பில் அடிப்படையில் 14 ஆயிரம் பேர் தங்கள் அடிப்படை மொழி சமஸ்கிருதம் என்று கூறி யுள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங் ளில் 1000க்கு குறைவானவர்கள் இந்த மொழியைப் பேசுகின்றனர். இது பெரும்பாலும் சமயச் சடங்குளின்போது பயன்படுத்தப்பட்டு வரு கிறது. பிரச்சார் பாரதி என்பது, சிறப்பாக இயற்றப்பட்ட சட்டமான 1990 ஆம் ஆண்டு பிரச்சார் பாரதி (இந்தியாவின் ஒளிபரப்புக் கழகம்) சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான அமைப்பாகும். இந்தச் சட்டத்தின் இரட்டை நோக்கங்கள் இச்சட்டத் தின் 12ஆவது பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. அதில் ஒளிபரப்பு பொது சேவையாக செயல்படுத்தப்படு வதை உறுதி செய்கிறது. இது ஒரு வடிவமாக (கார்ப்பரேஷன்) உருவாக்கப் பட்டது. செய்திகளைச் சேகரிப்பதற்காகத் தானே தவிர வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பராமரிக்க வும், வளர்ச்சியும் உறுதி செய்துள்ளது.

சமீபத்திய அறிவிப்பு

சட்டத்திற்கு எதிரானது!

இச்சட்டத்தின் 12 (எம்) பிரிவில் மாநிலங்கள், “தேசிய ஒருமைப் பாட்டை ஒளிபரப்பின் மூலம் மேம்படுத்தவும் அதன் மூலம் தகவல் தொடர்பை அளிக்கவும். ஒவ்வொரு மாநிலத்தில் மண்டல ஒளி பரப்புச் சேவையை அந்தந்த மாநிலத்தின் மொழியில் வழங்கவும் வேண்டும் என்று கூறியுள்ளது”. சமீ பத்திய அறிவிப்பு இந்தச் சட்டத்திற்கு எதிரானதாகும்.

இந்தச் சட்டத்தின் சட்டபூர்வ நோக்கம், தகவல் ஒளிபரப்புத் துறைச் செயலாளருக்கும் வங்காள கிரிக்கெட் சட்டத்திற்கும் இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றம் 1995ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பின் எதிரொலியாகும். அதில், “ஒளிபரப்பின் முதல் முகம் மாநிலம் அல்லது அரசின் கட்டுப்பாட்டி லிருந்து ஒளிபரப்புக்கு விடுதலை அளிப்பதாகும்”.

குறிப்பாக அரசின் சென்சார் முறையிலிருந்து விடுவிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதாகும். பொது ஒளிபரப்பை மாநில ஒளிபரப்புடன் ஒப்பிட முடியாது. இரண்டும் வேறுபட்டவை!

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் 14.12.2011 அன்று "உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் டி.டி.எச். ஆபரேட்டர்கள் கட்டாயமாக தூர்தர்ஷனின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண் டும்'' என்றும், “பார்லிமெண்ட் சேனல்களில் கேபிள் டெலிவிஷன் பணிகளை ஒளிபரப்ப வேண்டும்என்றும் உத்தரவிட்டி ருந்தது.

எனவே, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் 27 டி.டி.சானல் கள் ஒளிபரப்பப்பட்டன. அந்த சேனல்களில் ஒன்றான தூர்தர்ஷன் செய்தி சேனலில் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரை கட்டாயம் சமஸ்கிருதத்தில் ஒளிபரப்பப்பட வேண் டும் என்றும், அத்துடன் சனியன்று மாலை 6 மணி யளவில் வாராந்திர சமஸ்கிருத செய்தித் தொகுப்பு ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டது.

மாநில மொழிச் சேனல்களில்

கட்டாய சமஸ்கிருத ஒளிபரப்பு!

பிரச்சார் பாரதி அனைத்து மாநிலங்களிலும் மாநில மொழி களில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடிய வகையில் மாநில சேனல்களை நடத்தி வருகிறது. இதற் கிடையே சுற்றறிக்கை ஒன்றை அது அனுப்பியுள்ளது. அதன்படி, அனைத்து மாநில மொழிச் சேனல் களும் (தமிழகத்தில் பொதிகை) தினமும் சமஸ்கிருதத்தில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப் பட வேண்டும் என்றும், வார இறுதியில் சமஸ்கிருத செய்தித் தொகுப்பினை - வார்ட்ட வள்ளி - ஒளி பரப்பப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

மாநில மொழிகளில் உள்ள தொலைக் காட்சிகளில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பப்பட வேண்டும் என்ற பிரச்சார் பாரதியின் நடவடிக்கையானது பல்வேறு மொழி களில் ஒரு குறிப்பிட்ட மொழியைத் திணிக்கும் நடவடிக்கை என்ப தோடு மதரீதியிலான சிறுபான்மை யினர் மீதும் உயர்பிரிவினரை திருப்திப்படுத்துவ தற்கான நடவடிக்கையாகும். இது அரசியல் அமைப்புச் சட்டத் திற்கு முழுக்க முழுக்க எதிரான ஒன்று. குறிப்பிட்ட மொழியான சமஸ்கிருதத்தை

மட்டும் ஒளிபரப்பி அதைத் திணிப் பதற்கான அதிகாரம் பிரச்சார் பாரதிக்கு கிடையாது.

ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்!

இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது என்னவென் றால், பழமை யானதும், பாரம் பரியமிக்கதுமான உயரிய தமிழ் மொழி சமஸ்கிருதத் திலிருந்து வந்தது கிடையாது. தமிழகத்திலுள்ள நாம் விரும்புவது இந் தியாவில், மதச்சார்பற்ற இந்தியாவில், அனைவ ருக்கும் பொதுவான இந்தியாவில் நாம் இருக்க வேண்டும் என்பதுதான்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1) ()இன் படி குடிமக்களுக் கான சுதந்திரமான பேச்சுரிமை யால் ஒளிபரப்பு ஊடகங்கள் வெகுவாகப் பாதிக் கின்றன. இந்தக் கருத்தை உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்கு களில் வெளிப்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், அரசின் தன்னிச்சையான ஒளிபரப்பு ஊடகங்களோ, இதர கார்ப்பரேஷன் ஊடகங்களோ இவ்வாறு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசியல் சட்டப்பிரிவு 19 (2)-ன் படி பேச்சின் சுதந் திரத்தில் தன்னிச்சையாக செயல்படுவது அனுமதிக் கப்படவில்லை . அதே நேரம், கருத்து கள் வெளியிடு வதற்கு பிரிவு 19(6) அனுமதிக்கிறது. அத்துடன் பிரிவு 19 (1) () உரிமைக்கு உத்தரவாதம் அளிக் கிறது. ஒரு வெற்றிகரமான குடியரசு என்பது அதன் குடிமகன் எதையும் தெரிந்திருக்கவேண்டும் என்ப தாகும். இதை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங் களுக்கு அளிக்கப்படமாட்டாது.

இப்போதைய சுற்றறிக்கை ஜன நாயகத்திற்கு அச்சுறுத்தலாகும். எதையும் திணிப்பது என்பது வெற்றிக்கு வழிவகுப்பதாகாது. இதை கடுமையாக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதற்கு தமிழக மக்களுக்கு காலம் கனிந்துள்ளது.

இவ்வாறு வழக்குரைஞர் ஜெ. ரவீந்திரன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment