ஈரோட்டுப் பூகம்பம் முரசொலி முகிலன் மறைவு மூடச் சடங்குகள் இல்லாமல் அடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 16, 2020

ஈரோட்டுப் பூகம்பம் முரசொலி முகிலன் மறைவு மூடச் சடங்குகள் இல்லாமல் அடக்கம்

 
கீவளூர், டிச. 16-- திராவிடர் கழக மேடைகளில் ஈரோட்டு பூகம்பம் என்னும் கலை நிகழ்ச்சிகளை கடந்த 45 ஆண்டுகளாக  பகுத்தறிவு பிரச்சாரம் நடத்திவந்த முர சொலி முகிலன் 14.12.2020 அன்று அதிகாலை மாரடைப் பால் மறைவுற்றார்,

மறைந்த முரசொலி முகி லன் அவர்களின் உடல்  நாகை மாவட்டம் கீவளுர் ஒன்றியம், அவரது சொந்த ஊரான அத்திப்புளியூர் அவ ரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்தது, உறவினர்கள், நண்பர்கள் அனைத்து அரசி யல் கட்சியினர் இறுதி மரி யாதை செலுத்தினர்.

திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள் பெருந் திரளாக சென்று முரசொலி முகிலன் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.

மாலை 4 மணியளவில் இரங்கல் கூட்டம் நடை பெற்றது. கீவளூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் .மதிவாணன் தலைமை வகித்து இரங்க லுரையாற்றினார்

இரா.ஜெயக்குமார், திரு வாரூர் மாவட்ட தி.மு. செய லாளர், திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், திராவிடர் கழக நாகை மாவட்டத் தலை வர் வி.எஸ்.டி..நெப்போலி யன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், திருச்சி மாவட்டத் தலைவர் ஞா. ஆரோக்கிய ராஜ், திருத்துறைபூண்டி மாவட்டத் தலைவர் கி.முரு கையன், திருவாரூர் ஆசிரியர் முனியாண்டி, நாகை மாவட்ட இணைச்செயலா ளர் பாவா ஜெயக்குமார், கழக பேச்சாளர் இராம. அன்பழகன், கலைத்துறை செயலாளர் .சித்தார்ததன், தஞ்சை மாவட்ட செயலாளர் .அருணகிரி, திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராசு, திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, தி.மு. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தலையாமங்கலம் பாலு, பொதுக்குழு உறுப்பினர் தியாகபாரி, அங்காடி சேகர் ஆகியோர் இரங்கலுரையாற் றினர்.

முரசொலி முகிலன் மறைவை ஒட்டி தமிழர் தலை வர் ஆசிரியர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வாசித்தார்.

மறைந்த முரசொலி முகிலன் விருப்பப்படி அவர் உடலில் திருவாரூர் மாவட் டத் தலைவர் வீ.மோகன் கழகத்தின் சார்பில் கருப்பு துணியை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

முரசொலி முகிலன் எந்த கொள்கையை தனது வாழ் நாள் முழுவதும் பிரச்சார செய்தாரோ அந்த தந்தை பெரியர் கொள்கைப்படி எந்த வித மூடச்சடங்கும் இல்லா மல் கைப்பாடையில் எடுத்து சென்று அத்திப்புலியூர் சுடுக் காட்டில் அவர் விருப்பப் படியே அமைதியான முறை யில் அடக்கம் செய்யப்பட் டது.

நாகை, திருவாரூர், திருத் துறைபூண்டி, தஞ்சை, திருச்சி, மன்னார்குடி கழக மாவட் டங்களை சேர்ந்த கழக பொறுப்பாளாகள் தோழர் கள் கருஞ்சட்டையுடன் பெருந் திரளாக வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment