டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்து, ஜனவரி மாதத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் மட்டும் நடை பெறும் என மோடி அரசு அறிவித்துள்ளது.
· மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதன் காரணமாக ஹிந்துத்துவ ஆதிக்கம் இரண்டு தலைமுறைக்கு பின் தள்ளப் பட்டது என ஜுகல் பந்தி எனும் நூலில் ஆசிரியர் வினய் சீதாபதி கருத்திட்டுள்ளார்.
· நீட் ஆதரவு, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டின் காரணமாக தமிழ் நாட்டில் கமல்ஹாசன், எம்.ஜி.ஆர். வேடம் தரித்தாலும் வாக்கு பெற முடியாது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· நாட்டை மத ரீதியாக ஹிந்து - முஸ்லீம் மற்றும் ஹிந்து - சீக்கியர் என பிரிக்க முனையும் பாஜகதான் டக்டே டக்டே கும்பல் அதாவது பிரிவினைச் சக்தி என சிரோமணி அகாலி தள கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் குற்றம் சாட்டியுள்ளார்.
· மோடி அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி அருகே ஆயிரக்கணக்கில் போராடும் விவசாயிகளுக்கு, பஞ்சாப் கலாச்சார தலைப்பாகையான பக்டி லங்கார் என்ற தொப்பியை அனைவர்க்கும் பல வண்ணங்களில் அணியும் காட்சி அனைவரையும் ஈர்த்தது.
· மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தேவையின்றி நுழைகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· கர்நாடகாவில் பசு வதைத் தடை சட்டத்தை மேலவையில் நிறைவேற்ற முடியாததால், அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என அம்மாநில சட்ட அமைச்சர் மது சுவாமி கூறியுள்ளார்.
தி ஹிந்து:
· அய்.அய்.டி. கல்வி நிறுவன ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அமைத்த குழு பரிந்துரைத்துள்ளது.
தி டெலிகிராப்:
· டில்லியில் 20 நாட்களுக்கு மேலாக போராடும் விவசாயி களை சந்திக்காமல், தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கட்ச் பகுதியில் உள்ள விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து, வேளாண் சட்டங்கள், விவசாயிகளைப் பாதிக்காது என்று கூறினார்.
· அளவுக்கு மீறிய ஜனநாயகம் இந்தியாவில் உள்ளது என நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் கண்ட் கூறியது, மக்களுக்கான எச்சரிக்கை. வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில், அவரது கருத்து, மேலும் கடுமையான சட்டங்கள் தேவை என்பதாக உள்ளது என சிபிஅய் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பினாய் விஸ்வம் கூறியுள்ளார்.
· மோடி அரசுக்கு, போராடும் மாணவர்கள் தேச விரோதிகள், கவலை தெரிவிக்கும் குடிமக்கள் நகர நக்சல்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், கரோனா கொண்டு செல்பவர் கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் எதுவுமற்ற வர்கள், போராடும் விவசாயிகள் காலிஸ்தானிகள். ஆனால், பெரும் நிறுவன முதலாளிகள் மட்டுமே நண்பர்கள் என ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
· பீகார் மாநில பாஜகவில் மூத்த தலைவர்கள், மதசார் பின்மைக் கொள்கையில் ஓரளவு நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டு, ஹிந்துத்துவா கொள்கையை தீவிரமாக பேசுவோர்க்கு முக்கிய பொறுப்புகள் கொடுத்திட பாஜக தலைமை முடிவு செய்துள்ளது, கட்சியினரிடையே முனுமுனுப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடந்தை கருணா
16.12.2020
No comments:
Post a Comment