டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· கிறிஸ்துமஸ் நாளை வாஜ்பாய் பிறந்த நாளாக அறிவித்துள்ள மோடி அரசின் அறிவிப்பு மிக ஆபத்தானது என மூத்த பத்திரிகையாளர் கரன் தாப்பர் குறிப்பிட்டுள்ளார்.
· அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் அனைத்து மதத்தின ரையும் இணைத்து இந்தியா நடைபோடுகிறது என பிரதமர் மோடி பேசினார். ஆனால் உ.பி. போன்ற மாநிலங்களில் நடப்பவைகள் வேறுவிதமாக உள்ளன என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
தி ஹிந்து:
· தமிழகத்தில் நடைபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு முறையில், தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமையை சரியாக கடைப்பிடிக்காததையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தேர்வு முறைக்கு தடை விதித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· மோடி அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமர் பொய் பேசுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ், திமுக, சிபிஎம் உள்ளிட்ட பத்து எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்ட அறிக் கையை வெளியிட்டுள்ளன.
· தேசிய அளவிலான பாடத்திட்டம் மாநில அல்லது உள்ளூர் அளவிலான பிரச்சினைகள், சிக்கல்களுக்கு நீதி வழங்காது. அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் மாநிலங்கள் கொண்டுவந்தவையே என மிலிந்த் சோகானி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
- குடந்தை கருணா
25.12.2020
No comments:
Post a Comment