மறைந்த புலவர் இளங்கீரனுக்கு இறுதி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 19, 2020

மறைந்த புலவர் இளங்கீரனுக்கு இறுதி மரியாதை

காரைக்குடி, டிச. 19- பெரியார் பெருந் தொண்டர்  புலவர் .இளங்கீரன் சந்திர சேகரன் 16.12.2020 அன்று மறை வுற்றார். அவரது இல்லத்தில் இரங்கல் கூட்டத்து டன் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

இரங்கல் கூட்டம் கழக மாவட்ட செய லாளர் வைகறை தலைமையில் நடைபெற்றது. ஆறுமுகம் சேதுராமன், மா.து.ராசுகுமார் முன்னிலையில் மறைந்த புலவர் .இளங் கீரன் சந்திர சேகரன் சகோத ரர் .சோலை துஷ் யந்தன் தொடக்க உரையாற்றினார். பூசைத்துரை, பிச்சமுத்து, கர் ணன், கோச் சடை, தங்கச் சாமி, பெரியார் முத்து, பழனி வேல் வேம்பன், செயராசு, வழக்குரைஞர் சகுபர்கான்  ஆகியோர் இரங்கலுரை ஆற் றினார்கள். நிறை வாக அவர் மூத்த மகன் வழக்குரைஞர் .எழிலரசு இளங்கீரன் அனை வருக்கும் நன்றி கூறினார். புலவர் ..இளங்கீரன் சந்திர சேகரன் அறிவுறுத்தி யிருந்த படி எவ்வித சடங்கு, சம்பிர தாயங் களுமின்றி அவரது உடலை பெண்கள் சுமந்து சென்று வாகனத்தில் வைத் தனர். காரைக்குடி சந்தப் பேட்டை மின்மயா னத் தில் புலவர்..இளங்கீரன் சந்திர சேகரன் உடல் எரியூட்டப் பட்டது. நகர தலைவர் .செகதீசன், கொரட்டி பாலு, மாவட்ட துணை செயலாளர் ..பழனிவேல், மண் டல மாணவர் கழக செயலாளர் பிரவீன், முத்துவேல் உள் ளிட்ட கழகப் பொறுப்பா ளர்கள் உள்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment