கழகக் குடும்பங்களில் மருத்துவ மாணவர்கள்: தருமபுரி மாவட்ட கழகப்பொறுப்பாளர்கள் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 19, 2020

கழகக் குடும்பங்களில் மருத்துவ மாணவர்கள்: தருமபுரி மாவட்ட கழகப்பொறுப்பாளர்கள் பாராட்டு

தரும்புரி, டிச. 19- தருமபுரி மாவட்டத் தில் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைக ளுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைத் ததையொட்டி, அம் மாணவர்களை கழகப் பொறுப்பாளர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

செ.சி.முகிலனுக்கு பாராட்டு

தருமபுரி மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி--செல்வி இணையரின் மகன் செ.சி.முகிலன். அவருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்று கோவையில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். அவரை திராவிடர் கழகத்தின் சார்பாக ஊக்கத்தை தந்து தமிழர் தலைவருடைய வழி காட்டுத லோடு இந்த மக்களுக்கு சிறந்த சேவையை தருவதற்கு வருங் கால மருத்துவரை வாழ்த்தி வர வேற்று, மாநில அமைப்புச் செயலா ளர் ஊமை.ஜெயராமன் சிறப்பு செய்தார். அப்போது தருமபுரி பெரியார் புத்தக நிலையம் .மல் லிகா, இளைஞ ரணி காரல்மார்க்ஸ், ஓட்டுநர் மாதேஸ்வ ரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இரா. சுப்ரியாவுக்கு பாராட்டு

கிருட்டினகிரி மாவட்டம் மத் தூர் ஒன்றியம் பாண்டவர்குட்டை சேர்ந்த திராவிடர் தொழிலாளர் அணி பொறுப் பாளர்கள் . இராதாகிருட்டி னன், ஒன்றிய மகளிரணி தலைவர் இரா. சவுந்தரி ஆகியோரது மகள் இரா. சுப்ரியா கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

கிருட்டினகிரி மாவட்ட தலைவர் அறிவரசன், மாவட்ட செயலாளர் மாணிக்கம்,மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன், கிருட்டினகிரி நகர தலைவர் தங்க ராசன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் அண்ணா. சரவணன் ஆகியோர் அவரது இல்லம் சென்று பாராட்டினர். தந்தை பெரியார், அண்ணல் அம் பேத்கர் ஆகியோர் பெற்றுதந்த இட ஒதுக்கீடு காரணமாகவே மருத் துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள் ளது, குறிப்பாக நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கடுமையான போராட்டம், சட்ட நுண்ணறிவின் காரணமாக 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பாது காக்கப் பட்டதன் காரணமாகவே மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத் துள்ளது. அந்த நன்றியோடு அனைவரும் இருக்க வேண்டுமென குறிப்பிட்டு,  மாவட்ட தலைவர் அறிவரசன் அறிவுரை வழங்கி பாராட்டு தெரிவித்தார். உறவினர் பல ரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment