நாகை, டிச. 19- நாகப்பட்டினம் மாவட் டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரத் தில்16.12.2020 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் ஷஃபா திருமண மண்டபத்தில் தந்தை பெரியார் 142ஆவது பிறந்தநாள் விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் 88ஆவது பிறந்த நாள் விழா தமிழர் தலைவர் அவர்கள் எழுதிய "ஒப்பற்ற தலைமை", வாழ்வியல் சிந்த னைகள்,பேராசிரியர் அருணன் எழு திய ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம், ஆகிய நூல்கள் அறிமுக விழா எழுச்சியுடன் நடை பெற்றது
நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமை ஏற்று உரையாற்றினார் அனைவரையும் வரவேற்று நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா உரையாற்றினார், மாநில மாணவர் கழக துணை செயலாளர் நா.பொன்முடி திருமருகல் ஒன்றிய தலைவர் பொன்.செல்வராசு மண்டல இளைஞரணி செயலாளர் சு. ராஜ்மோகன் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இரச. முருகை யன் நாகை மாவட்ட துணை செய லாளர் பாவா.ஜெயக்குமார் இணைச் செயலாளர் இரா.இராமலிங்கம் ஆகி யோர் முன்னிலை ஏற்று உரையாற் றினார்கள்.
சி.பி.எம். சுபாஷ் சந்திரபோஸ் உரை
பேராசிரியர் அருணன் எழுதிய ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவி டர் கழகம் எனும் நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் வழக்குரைஞர் சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டு திராவிடர் கழகத்தின் தேவையும் தந்தை பெரியாரின் தேவையையும் தமிழர் தலைவர் ஆசிரியருடைய பணியையும் இந்த காலகட்டத்திற்கு மிக முக்கிய மானது என்பதனையும் திராவிடர் கழகமும் பொதுவுடமை இயக்கங்க ளும் இணைந்து மக்களுக்காக பணி யாற்றும் சூழ்நிலைகள் எல்லாம் எடுத்துக்கூறி உரையாற்றினார்.
தி.மு.க ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் உரை
ஆசிரியரின் "வாழ்வியல் சிந்தனை கள்" நூலை வெளியிட்டு தி.மு.க திருமருகல் வடக்கு ஒன்றிய செயலா ளர் செல்வ. செங்குட்டுவன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய மனிதநேய பண்புகளையும் தனிமனித ஒழுக்கத்தையும் இன்றைய தலை முறை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர் அவர்களின் பணியின் தேவையையும், இந்த வயதிலும் பணிச்சுமையிலும் தொடர்ந்து வாழ் வியல் சிந்தனைகளை விடுதலையில் எழுதிவருவதும் அதனை தொகுத்து 15 பாகங்கள் புத்தகமாக வந்திருப்பதும் வியப்பாக உள்ளது, இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும், மனித வாழ்வில் அனைவரும் பின்பற்ற வேண் டியவை ஆசிரியர் எழுதிய இந்த புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பை வழங்கிய திராவிடர் கழக தோழர் களுக்கு நன்றியை தெரிவித்து தனது உரையை நிறைவுசெய்தார்
கழக பொதுச்செயலாளர்
இரா.ஜெயக்குமார் தொடக்கவுரை
திராவிடர் கழக பொதுச்செயலா ளர் இரா.ஜெயக்குமார் தொடக்க வுரையாற்றினார் கரோனா கொடும் தொற்று காலத்தில் 110 க்கும் மேற் பட்ட காணொலி கூட்டங்களில் உரை யாற்றி கரோனா உலகை முடக்கலாம் பெரியார். ஆனால் கொள்கையை யாராலும் முடக்க முடியாது என்று தமிழகத்தில் அனைவருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்தார் நமது தலைவர் ஆசிரியர்
ஒப்பற்றத் தலைமை, மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதி போன்ற பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி அவையெல்லாம் நமக்கு புத்தகமாக இன்று வெளிவரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,
திராவிடம் வெல்லும்
கடந்த 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிடர்கழக தலை மைச்செயற்குழு கூட்டத்தில் 17 தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன 17ஆவது தீர்மானம் இனம் மீட்சிபெற, மாநில உரிமை, சமூக நீதி பெற்றிட வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும் அந்த ஒன்றை இலக்காக கொண்டு செயல் பட வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
இனி நமது முழக்கம் "திராவிடம் வெல்லும்" என்பதுதான்
மார்ச் 16 முதல் எனது சுற்றுப் பயணம் அமையும் என தமிழர் தலை வர் குறிப்பிட்டதை தனது உரையில் எடுத்துரைத்தார் இங்கு வந்துள்ள தி.மு.க மாவட்ட செயலாளர் உட்பட அனைத்து கட்சி தோழர்கள், கழகத் தோழர்கள் திராவிடம் வெல்லும் முழக்கத்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் நமது ஒரே இலக்கு தி.மு.க ஆட்சிக்கு வருவதுதான் என முழங்கி 88வயதிலும், தானும் சுறுசுறுப்புடன் இயங்கி, நம்மையும், தமிழ்நாட்டு தலைவர்களையும் இயக்கி ஓய்வில் லாமல் உழைத்து வரும் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை எழுச்சியோடு நடத்திய நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு பாராட்டு தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்
மாவட்ட தி.மு.கழக செயலாளர்
என்.கவுதமன் உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஒப்பற்ற தலைமை எனும் நூலை திராவிட முன்னேற்றக் கழக நாகை மாவட்ட செயலாளர் என்.கவுதமன் அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார் தனது உரையில் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா தலைவர் கலைஞர் தமிழர் தலைவர் கி.வீரமணி, திமுகதலைவர் தள பதி ஆகியோர் இந்த தமிழ் சமுகத்திற்கு ஆற்றிவரும் பணிகளையும் இந்த காலகட்டத்தில் இவர்களது தேவை களையும் எடுத்துரைத்து, ஆசிரியர் கரோனா காலத்தில் காணொலியில் பேசிய பேச்சு" ஒப்பற்ற தலைமை "என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள இந்த புத்தகத்தை வெளியிட எனக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கிய திராவிடர் கழக தோழர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன், ஆசிரியரின் வழிகாட்டுதல் தமிழகத் திற்கு நீண்ட நாட்ககள் தேவை அவர் பல்லாண்டு வாழ்ந்து வழிகாட்டிட வேண்டும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என உரை யாற்றினார்
இராம.அன்பழகன் சிறப்புரை
இறுதியாக கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற் றினார், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி அமைப்புகளின் மக்கள் விரோத செயல்திட்டங்களையும் அவற்றை தடுத்திட தமிகத்தில் ஆட்சிமாற்றம் வந்தாகவேண்டும்
ஆன்மீகமும், அரசியலும் வேறு, வேறு இந்த சூழ்ச்சியை மக்கள் புரிந்து செயலாற்ற வேண்டும் 10 வயதில் பொதுவாழ்க்கைக்குவந்தவர் ஆசிரியர், 14 வயதில் வந்தவர் கலைஞர் அவர்களின் தொடர்ச்சி தளபதி ஸ்டாலின் நமது இனம் மீட்சிபெற தி. மு.க ஆட்சிக்கு வரவும் அதற்காக நாம் அனைவரும் உழைப்போம் என தனது உரையில் குறிப்பிட்டார்
முன்னதாக நாகூர் நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமருகல் ஒன்றிய செயலாளர் ஜெயபால் ஆகி யோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மாவட்டக்குழு ஊராட்சி துணைத்தலைவர் அஜிதா ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், பொதுக்குழு உறுப்பினர் கமலம், மாவட்ட மகளிரணி தலைவர் பேபி, கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் துரைசாமி, ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஜி.எஸ்.ஸ்டாலின் பாபு, தி.மு.க. ஒன்றிய துணை செய லாளர் கை.மதியழகன், தி.மு.க. கலை இலக்கிய பேரவை ஒன்றிய துணைச் செயலாளர் குரு. மணிமாறன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் பாஸ் போர்ட் சேகர், திமுக மாவட்ட பிரதிநிதி ஹாஜா, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் திமுக சவு.பிர பாகரன், புத்தகரம் திமுக பொறுப் பாளர்கள் தெ.கண்ணதாசன், த.பன் னீர்செல்வம், சு.சுந்தர்ராஜ், எம்.சந்திர மோகன், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் முகமது முசுருதீன், புத்தகரம் எஸ். இளங்கோவன், செ.ஜீவா, திட்டச்சேரி பேரூராட்சி செய லாளர் முகம்மது சுல்தான் முகமது அன்சாரி, இளஞ்செழியன், ஆர்வி எஸ் ரஃபிக், நுகத்தூர் கஜேந்திரன், பாரதிமோகன், ஸ்டாலின், தே.கஜேந் திரன், மாவட்ட ஆசிரியர் அணி அமைப்பாளர் சி.தங்கையன், ம.இள மாறன், இல.மணிகண்டன், கீழ்வே ளூர் தங்கராசு, தமிழ்ச்செல்வன், பாஸ்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் சுப்ரவேல், ஒரத்தநாடு ஒன்றிய முன்னாள் செய லாளர் பெரியார்நகர் அ.உத்திராபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இறுதியாக ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.
"மயக்க பிஸ்கட்டுகள் "ஓர் எச்சரிக்கை புத்தகம் விநியோகம்
"தேசியம் காக்க, தமிழினம் காக்க" புறப்படுவோரே பதில்கூறுங்கள் "மயக்க பிஸ்கெட்டு"கள் - ஓர் எச்ச ரிக்கை புத்தகம் அனைவருக்கும் வழங் கப்பட்டது.

No comments:
Post a Comment