‘விவசாயிகளுக்காக எந்த வழக்கையும் சந்திக்க தயார்’ பட்டினிப் போராட்ட நிறைவில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 19, 2020

‘விவசாயிகளுக்காக எந்த வழக்கையும் சந்திக்க தயார்’ பட்டினிப் போராட்ட நிறைவில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்!

சென்னை, டிச. 19 சென்னையில் நேற்று (18.12.2020) நடந்த பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து, திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் பேசியதாவது:

விவசாயிகளுக்கு ஆதரவான இந்த பட்டினிப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்து, முறையாக காவல்துறையிடம் அனுமதி கேட்டோம்; அனுமதி தரவில்லை - அனுமதியில்லாமல் தடையை மீறி நடக்கிற போராட்டம்தான் இந்த  போராட்டம். நேற்றைக்கு இந்நேரம் வரையில், இந்த போராட்டம் நடைபெறுமா, அல்லது போராட் டத்தை நடைபெற விடாமல் தடுத்து, அதை மீறி நடத்துகின்ற நேரத்தில் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் சென்று பட்டினிப் போராட்டத்தை நடத்தப்  போகிறோமா என்று நான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத் திருந்தேன். “தடை போட்டு இருக் கிறார்களே என்ன செய்யப் போகி றோம்?” என்று வைகோ கூட நேற்று மாலை என்னிடம் தொலைபேசியில் பேசினார். “கவலைப்படாதீர்கள் அண்ணா.  தடையை மீறி நடத்து வோம். நிச்சயம் போராட்டம் உண்டுஎன்று சொன்னேன்.

நடத்தி முடித்து விட்டோம். வழக்கு வரும். என்ன வழக்கு. நாங்கள் பார்க்காத வழக்குகளா. போராட்டம் 5 மணி வரையில் நடைபெறும் என்று சொன்னோம்  இப்போது அய்ந்து மணியைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கும் சேர்த்து வழக்கு வரும். இந்த போராட்டத்தை இன்று ஏதோ திடீரென்று நாம் நடத்திக் கொண்டிருக்கவில்லை. மூன்று நாட் களுக்கு முன்பு முடிவுசெய்து நடத் துகின்ற  போராட்டம்தான். திமுக இப்படி போராட்டங்கள் நடத்து வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி ஆத்திரத் தோடு விமர்சனம் செய்கிறார்.  “7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்த கலைஞர்என்று வைகோ  பேசுகிற போது சொன் னாரே, அவருடைய பிள்ளை ஸ்டாலின்."

"விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இலவச மின்சாரம் தந்தாரே கலைஞர், அவருடைய பிள்ளை  ஸ்டாலின்." இந்த பட்டினிப் போராட்டத்தின் மூலமாக நான் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புவது, எல்லோரும் சொன்னதுபோல், இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றி ருக்கிறது. உள் ளபடியே மகிழ்ச்சி. ஆனால்,  டில்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் அந்தப் போராட் டத்தில் என்றைக்கு வெற்றி பெறு கிறார்களோ, அது வரையில் நம்முடைய போராட்டமும் ஓயாது. அதற்கான வியூகங்களை நம்முடைய கூட்டணிக் கட்சிகளி னுடைய  தலைவர்களுடன் ஒருங் கிணைந்து, கலந்துபேசி முடிவெடுத்து, அவ்வப்போது போராட்டத்தை நாங்களும் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

மு..ஸ்டாலின் உள்ளிட்ட 1500 பேர் மீது வழக்குப்பதிவு

டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை  திரும்ப பெற கோரியும் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் தலைமையில் பட்டினிப் போராட்டம் நடந்ததுஇந்த போராட்டத்திற்கு முதலில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டதுகாவல்துறை அனுமதி வழங்காமல் போராட்டத்திற்கு தடை விதித்தனர்இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக திமுக தலைவர் தளபதி  மு..ஸ்டாலின்வைகோபாலகிருஷ்ணன்முத்தரசன்திருமாவளவன் உள்ளிட்ட 1500 பேர் மீது இபிகோ 143, 188, 269 மற்றும் சிட்டி போலீஸ் ஆக்ட் 41 ஆகிய 4 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment