சென்னை, டிச.19 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவு களில் சிறந்த நூலுக்கான பரிசுகள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வந்தது.
2015 ஆம் ஆண்டுக்கு பின் பரிசுகள் வழங்கப்படவில்லை.
அதன் விதிமுறைகளில் மாற்றம் செய்து தற்போது மீண்டும் சிறந்த நூல் களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது தமிழ் வளர்ச்சி துறை இயக்கம்.
அந்த அடிப்படையில் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களால் எழுதப்பட்டு, திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக வெளிவந்த 'பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்' நூல் வாழ்க்கை வரலாற்று பகுதியில் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு, நூலாசிரியரான தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக் கும், பதிப்பகமான திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகத்திற்கும் பரிசுகள் வழங்கப் பட்டன.
இந்த நூல் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றில் நிகழ்ந்த சம்ப வங்களுடன் அந்நிகழ்வுகள் சொல்லும் தத்துவத்தை இணைத்து செல்லும் வகையில் சுவையான நடையில் எழுதப் பட்டதாகும்.
நூலாசிரியர் சார்பிலும், பதிப்பகத்தின் சார்பிலும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் நேரில் சென்று பரிசுகளை பெற்றுக் கொண்டார். நூலாசிரியருக்கு ரூபாய் 10,000/-க்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. பதிப்பித்த பதிப்பகமான திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகத்திற்கு ரூ.3,333/-க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
பரிசு வழங்கும் விழா சென்னை எழும்பூர் தமிழ் சாலையில் அமைந் துள்ள தமிழ் வளர்ச்சித் துறை இயக்கக வளாகத்தில் நேற்று (18.12.2020) நடை பெற்றது.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ.விஜயராகவன் நிகழ்ச் சிக்கு வரவேற்புரையாற்றினார்.
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் தலைமை வகித்தார்.
தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் தொல் லியல் துறை அமைச்சர் க.பாண்டிய ராஜன், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.
(நூலைப் பற்றிய சிறப்பு செய்தி தனிக் கட்டுரையாக)

No comments:
Post a Comment